பகுதி 2 - கீர்த்தித் திரு அகவல் 6
அவன் நமக்காக இங்கே குதிரையின்மீது ஏறி அழகுற வந்தான், மீண்டும் இங்கே பிறக்காமல் இருக்க அருள் புரிகிற அவன் பாண்டி நாட்டையே தன்னு


பாடலின்பம்
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்
பரிமாவின்மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழி அருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
பத்திசெய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்
உத்தரகோசமங்கை ஊர் ஆகவும்
ஆதிமூர்த்திகட்கு அருள் புரிந்து அருளிய
தேவதேவன் திருப்பெயர் ஆகவும்
இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள்மலை ஆகவும்…
பொருளின்பம்
விஷ்ணு, பிரம்மன் இருவரும் தன்னுடைய எல்லைகளை அறிய இயலாதபடி உயர்ந்து நின்றவன்,
அவன் நமக்காக இங்கே குதிரையின்மீது ஏறி அழகுற வந்தான், மீண்டும் இங்கே பிறக்காமல் இருக்க அருள் புரிகிற அவன் பாண்டி நாட்டையே தன்னுடைய பழைமையான ஊர் என்று ஏற்றுக்கொண்டு,
பக்தி செலுத்துகிற அடியவர்களைப் பரமபதம் சேரச் செய்கிறான்,
சிவபெருமான் உத்தரகோசமங்கை என்கிற திருத்தலத்தைத் தன் ஊராகக் கொண்டிருக்கிறான், ஆதிமூர்த்திகளுக்கு அருள் புரிகிறான், அந்தத் தன்மையால் ‘தேவதேவன்’ என்ற திருப்பெயரைக்
கொண்டிருக்கிறான்,
நம்முடைய அறியாமை, மாயை ஆகிய இருள்களைப் போக்கி, அருள் செய்கிற இன்ப வாகனம் அவன்,
அவன் நமக்கு அருள் செய்யும் பெருமை, ஒரு சிறந்த அருள்மலையாக ஓங்கி நிற்கிறது!
சொல்லின்பம்
அளவு: எல்லை/ தன்மை
பரிமா: குதிரை
மிசை: மேலே
பயில்தல்: பயின்றுவருதல்/ ஏறிவருதல்
பதி: ஊர்
பத்தி: பக்தி
கடிந்து: கோபித்து/ நீக்கி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...