பகுதி 3 – திருவண்டப் பகுதி 4
நாம் வசிக்கும் இந்த அண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவன் சிவபெருமான். இந்த அண்டத்தையே நாம் வியக்கும்போது, அதை ஆளும் இறைவன் எந்த அளவு உயர்வானவனாக இருக்க வேண்டும்! அந்த வியப்பைக் குறிப்பிடும் பாடல் இது.


பாடலின்பம்
சொல் பதம் கடந்த தொல்லோன்,
உள்ளத்து உணர்ச்சியும் கொள்ளவும் படாஅன்,
கண்முதல் புலனால் காட்சியும் இல்லோன்,
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்,
பூவின் நாற்றம் போன்று உயர்த்து எங்கும்
ஒழிவு அற நிறைந்து மேவிய பெருமை
இன்று எனக்கு எளிவந்து அருளி
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்
இன்று எனக்கு எளிவந்து இருந்தனன், போற்றி!
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி!
பொருளின்பம்
சொற்களால் வர்ணிக்க இயலாத தன்மை கொண்ட பழம் பெரும் இறைவன்,
உள்ளத்து உணர்ச்சியாலும் அவனை அறிய இயலாதவன்,
கண் முதலான புலன்களாலும் அறிய இயலாதவன்,
ஆகாயம் தொடங்கி ஐம்பெரும் பூதங்களும் தோன்றும்படி வகுத்தவன்,
பூவில் கலந்திருக்கும் நறுமணத்தைப்போல எங்கும் நிறைந்திருக்கும் பெருமையுடையவன்,
அத்தகைய இறைவன், இன்று எனக்காக எளிமையான உருவில் எழுந்தருளினான், என்னுடைய அழியக்கூடிய உடலை ஒழித்து மீண்டும் பிறக்காதபடி செய்தான்,
உயர்ந்த பொருளான சிவபெருமான், எனக்காக எளியவனாக வந்து காட்சி செய்தான், அவனை வணங்குகிறேன், என் உடலில் அன்பைப் பெருகச்செய்தான், அவனை வணங்குகிறேன்.
சொல்லின்பம்
தொல்லோன்: பழமையானவன்
நாற்றம்: மணம்
ஒழிவு அற: நீக்கமற
மேவிய: விளங்கிய
எளிவந்து: எளிமையாக
ஆக்கை: உடல்
ஒண்பொருள்: உயர்ந்த பொருள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...