பகுதி 40 – குலாப் பத்து - 4
அத்தகைய ஒளிநிறைந்த தில்லை ஆண்டானை நான் பற்றிக்கொண்டேனே.


குலாவுதல் என்றால் மகிழ்ச்சியாக இருத்தல் என்று பொருள். தில்லையில் சிவபெருமானின் ஆடலைக்கண்டு மகிழ்ந்தது பற்றி மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இவை.
‘குலா’ என்ற சொல்லுக்கு விளக்கம் / விளங்கித் திகழ்தல் என்ற பொருளும் உண்டு. தில்லையில் சிவபெருமான் சிறப்பாகத் திகழ்வது பற்றி மகிழ்ந்து பாடிய பாடல்கள் என்றும் சொல்லலாம்.
இவை தில்லையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
பாடலின்பம்
மதிக்கும் திறல்உடைய வல்அரக்கன் தோள்நெரிய
மிதிக்கும் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசு,பாசம் ஒன்றும்இலோம் எனக்களித்துஇங்(கு)
அதிர்க்கும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
*
இடக்கும் கருமுருட்டு ஏனப்பின் கானகத்தே
நடக்கும் திருவடி என் தலைமேல் நட்டமையால்
கடக்கும் திறல்ஐவர் கண்டகர்தம் வல்ஆட்டை
அடக்கும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
பொருளின்பம்
பிறரால் மதிக்கப்படுகிற வீரத்தைக் கொண்ட வலிமையான அரக்கன் ராவணன். அவனுடைய தோள் நெரியும்படி மிதித்த திருவடிகள் சிவபெருமானுடையவை.
அந்தத் திருவடிகள் என் தலைமேல் வீற்றிருக்கின்றன, அதனால், மேலும் மேலும் எழுகின்ற பசு, பாசம் என்கிற பந்தங்கள் எங்களுக்கு இல்லை, இதை எண்ணி நான் களிப்படைவேன்.
பெருமுழக்கம் செய்கின்ற ஒளி நிறைந்த தில்லை ஆண்டானை நான் பற்றிக்கொண்டேனே.
*
நிலத்தைத் தோண்டுகின்ற, கருப்பான, வலிமையான பன்றிக்குப் பின்னால் கானகத்தில் (வேடனாக உருவெடுத்து) நடந்து சென்றவன் சிவபெருமான்.
அன்றைக்குக் காட்டில் நடந்த அந்தத் திருவடிகளை அவன் என் தலை மீது நட்டான். அதனால், என்னை வெல்ல நினைத்த ஐம்பொறிகளாகிய வேடர்களின் வலிமையான வெறியாட்டத்தை அவன் அடக்கினான்.
அத்தகைய ஒளிநிறைந்த தில்லை ஆண்டானை நான் பற்றிக்கொண்டேனே.
சொல்லின்பம்
திறல்: வீரம்
வல் அரக்கன்: வலிமையான அரக்கன்
நெரிய: நெரிந்துபோக
கதிக்கும்: திரும்பத் திரும்ப எழுகின்ற
பசு, பாசம்: உயிர், கட்டுகள்
அதிர்க்கும்: முழக்கம் செய்யும்
குலாத்தில்லை ஆண்டான்: விளங்கும் தில்லை ஆண்டவன் / சிவபெருமான்
இடக்கும் கரு முருட்டு ஏனம்: நிலத்தைத் தோண்டுகின்ற, கருப்பான, வலிமையான பன்றி
ஐவர் கண்டகர்தம் வல்ஆட்டை: ஐம்பொறிகளான வேடர்களின் வலிய ஆட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...