சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 51

வேல் விருத்தத்தின் ஏழாம் பாடலுக்கான பதவுரை, அடியுரை, கருத்து எல்லாவற்றையும் இப்போது பார்ப்போம்.

Updated On :29 அக்டோபர் 2015, 11:28 am

வேல் விருத்தத்தின் ஏழாம் பாடலுக்கான பதவுரை, அடியுரை, கருத்து எல்லாவற்றையும் இப்போது பார்ப்போம்.

பதச் சேதம்

சொற் பொருள்

அண்டங்கள் ஒருகோடி ஆயினும் குலகிரி அநந்தம் ஆயினும்அண்டங்கள்: உலகங்கள், குலகிரி: மிகப் பெரிய மலைகள், அனந்தம்: கணக்கற்ற
மேவினால்அடைந்தால்
அடைய உருவி புறம் போவது அல்லது தங்கல் அறியாதுமொத்தமாய் உருவி வெளியேறுவதல்லாமல் உள்ளே தங்கி நிற்கத் தெரியாது.
சூரன் உடலைக் கண்டம் பட பொருது காலனும் குலைவு உறும் கடிய கொலை புரியும் அதுகண்டம்: துண்டங்களாக, பொருது: போர் செய்து, குலைவுறும்: கலங்கும்
செம் கநக அசலத்தை கடைந்து முனை இட்டு கடுக்கின்ற துங்க நெடு வேல்சிவந்த, கனக அசலத்தை: பொன்மலையை, கடுக்கின்ற: ஒக்கின்ற துங்க: தூய
தண்டம் தநு திகிரி சங்கு கட்கம் கொண்ட தானவ அந்தகன் மாயவன்(கௌமோதகி என்ற) கதை, (சார்ங்கம் என்ற) வில், (சுதர்சனம் என்ற) சக்கரம் (பாஞ்சஜன்யம் என்ற) சங்கு, (நாந்தகம் என்ற) வாள், தானவ அந்தகன்: அரக்கர்களின் யமன், மாயவன்: திருமால்
தழல் விழி கொடுவரி பரு உடல் பல தலை தமனிய சுடிகையின் மேல்நெருப்பு விழிகளை, வரிகள் அமைந்த தடிமனான உடல், தமனியம்: பொன், சுடிகை: படுக்கை
வண்டு ஒன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை மங்கையும் பதம் வருடவேதாமரையில் வீற்றிருப்பவளும், கடலை ஆடையாகக் கொண்டவளும்
மதுமலர் கண் துயில் முகுந்தன் மருகன் குகன் வாகைத் திருக் கை வேலே.தேன்சிந்துவதான தாமரையைப் போன்ற கண்களைக் கொண்ட திருமாலுடைய மருகனுடைய வெற்றித் திருக்கையிலுள்ள வேலே அதுவாகும்

அண்டங்கள் ஒரு கோடி ஆயினும் ... எதிரே உள்ளவை கோடிக்கணக்கான உலகங்கள் என்றாலும்,

குலகிரி அநந்தம் ஆயினும் ... கணக்கில் அடங்காத பெரிய மலைகள் என்றாலும்,

மேவினால் ... அவற்றை அடையுமாறு வீசப்பட்டால்

அடைய உருவி ... அவை அத்தனைக்கும் உள்ளே முன்புறமாக நுழைந்து,

புறம் போவது அல்லது ... பின்புறமாக வெளியேறுமே அல்லாமல்,

தங்கல் அறியாது ... உள்ளே நுழைந்து அப்படியே தங்கிவிடுவது என்பதை அறியவும் அறியாதது.

(இராமசரம் ஒரே நேரத்தில் ஏழு மராமரங்களை ஊடுருவியதைப் போல, முருகன் கைவேல் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான உலகங்களையும், கணக்கற்ற பெரிய மலைகளையும் ஊடுருவும்)

சூரன் உடலை ... சூரபத்மனின் தேகத்தை,

கண்டம் பட பொருது ... போரில் பற்பல துண்டுகளாகும்படி வெட்டிச் சிதைத்து,

காலனும் குலைவுறும் ... எமனும் நடுங்கிப் போகுமாறு,

கடிய கொலை புரியும் அது ... போர்க்களத்தில் கொடிய கொலைத் தொழிலைச் செய்வதும்,

செம் கநக அசலத்தைக் கடைந்து ... பொன்மயமான மேருமலையைக் கடைந்தெடுத்து,

முனையிட்டு ... (அப்படிக் கடைந்த நீண்ட கைப்பிடிக்கு) கூர்மையான முனையைப் பொருத்தியதை,

கடுக்கின்ற ... ஒத்திருக்கின்ற,

துங்க நெடு வேல் ... தூய்மையான, நீண்ட வேல் (பொன்மயமான மேருமலையைக் கடைந்து பிடியமைத்து, அதற்குக் கூரிய முனையைப் பொருத்தியதை ஒக்கின்ற வேல்)

(இது யாருடைய வேலோ என்று கேட்டால்)

தண்டம் ... கெளமோதகி என்ற கதை,

தநு ... சார்ங்கம் என்ற வில்,

திகிரி ... சுதர்சனம் என்ற சக்கரம்,

சங்கு ... பாஞ்சஜன்யம் என்ற சங்கு,

கட்கம் ... நாந்தகம் என்ற வாள் (இந்த பஞ்சாயுதங்களைக் கொண்டவனும்),

தானவ அந்தகன் ... அசுரர்களுக்கு எமன் போன்றவனும்,

மாயவன் ... மாயோன் ஆனவனும்,

(அடுத்து வருவது ஆதிசேடன் வருணனை)

தழல் விழி ... நெருப்பைப்போல் எரியும் கண்களையும்,

கொடுவரி ... வளைந்த கோடுகளையும்,

பரு உடல் ... பருத்த உடலையும்,

பல தலை ... ஆயிரம் கிரீடங்களையும் கொண்ட

தமனிய ... பொன்நிறமான,

சுடிகையின் மேல் ... (ஆதிசேடனாகிய) படுக்கையின் மேல்,

வண்டு ஒன்று கமலத்து மங்கையும் ... வண்டுகள் மொய்க்கின்ற
செந்தாமரையில் வாசம் செய்பவளான ஸ்ரீதேவியும்,

கடலாடை மங்கையும் ... கடலை ஆடையாகத் தரித்துள்ள பூ தேவியும்,

பதம் வருடவே ... தன் திருப்பாதங்களை வருடிக் கொடுக்க,

மது மலர் கண் துயில் ... தேன் சிந்தும் தாமரை போன்ற அழகான
கண்களை மூடிக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும்,

முகுந்தன் மருகன் ... மஹாவிஷ்ணுவின் மருமகனும்,

குகன் வாகைத் திருக் கை வேலே ... குக மூர்த்தியுமானவனின் வெற்றித் திருக்கரத்தில் விளங்குகின்ற வேலே அது.

ஏழு மராமரங்களை ஒரே நேரத்தில் பிளந்த இராம சரத்தைப்போல இந்த வேல் கோடிக்கணக்கான உலகங்களையும், கணக்கற்ற மலைகளையும் ஒரே நேரத்தில் சாய்க்கவல்லது. சூரபத்மனின் உடலைப் பிளந்த இது, மேருவைக் கடைந்து, அதற்குக் கூர்மையான முனையைப் பொருத்தியதைப் போன்ற மிகப்பெரிய வடிவத்தைக் கொண்டது. (இந்த வேல் யாருக்குரியதென்றால்),

பஞ்சாயுதங்களை ஏந்தியவனும், அசுரர்களுக்கு எமனும், உக்கிரமான பாம்பாகிய ஆதிசேடப் படுக்கையிலே சீதேவி பூதேவி தாயார்கள் பாதம் வருட அறிதுயில் கொள்பவனுமான திருமாலுடைய மருகனும், அடியார் இதயக் குகைகளில் வாசம் செய்பவனுமான குகனுடைய வெற்றித் திருக்கரத்தில் விளங்கும் வேலே அது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.