உபாசனா மூர்த்தியை நேரில் அழைக்க முடியுமா என்று சம்பந்தாண்டான் கேட்க, அதைத் தொடர்ந்து நடந்த பல நிகழ்ச்சிகளின் முடிவில் — நேரில் வரமறுத்துவிட்ட துர்க்கையை, ‘குறைந்தது கந்தன் காட்சியளிப்பதையாவது தடு’ சம்பந்தாண்டான் கேட்டுக்கொள்ளவும், முருகனை துர்க்கை தன் மடியிலே இருத்திக்கொள்ள, குருநாதர் பல பாடல்களைப் பாடியபின்னரும் முருகன் எழுந்தருளாமைக்குக் காரணம், கயிலையில் ‘அரகர’ என்ற முழக்கத்துடன் அகிலாண்ட நாயகியின் மடியில் ஆறுமுகன் இருப்பதே என்பதை உணர்ந்தார். அப்போது மயில் விருத்தம் பாடத் தொடங்குகிறார். இதை தன்னுடைய ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் பின்வருமாறு பாடுகிறார் -
சித்திரக் கலாபச் சிகாவள மதைச்சிந்தை செய்து போற்றி
புத்திரக் குருக்களெனப் பூதேசர்க் கொருமொழியைப் புகன்ற கோவை
சத்திரக்க ராதிபனு வந்திட வெரின்கொண்டு சங்க முன்னர்
மித்திரமொ டெய்துகென பரவிமயில் விருத்தமதை விளம்பி னாரே.
(பொருள்) மயினை மனத்தில் கொண்டு தந்தைக்கு உபதேசித்த தனிஞான வள்ளலை, பிரபுடதேவன் மகிழ, முதுகில் சுமந்துகொண்டு இக்கூட்டத்தின் முன்னே வருக என வேண்டி மயில் விருத்தத்தைப் பாடலானார்.
கலாபம்: தோகை, சிகாவளம்: மயில்; பூதேசர்: சிவபெருமான்; சத்திரம்+கரம்+அதிபன்: கைவிடாப்படை கொண்ட மன்னனான பிரபுடதேவன்; வெரின்: முதுகு.
அப்படிப் பாடப்பட்ட மயில் விருத்தத்தைத் தொடர்ந்து அதல சேடனாராட பாடலைப் பாடியபோது, கம்பத்தடியில் முருகன் காட்சி தந்தான். முருகனுடைய காட்சியைப் பெற்றுத் தந்த மயில் விருத்தத்தை இன்றுமுதல் பார்க்கிறோம். இதிலும் பத்துப் பாடல்கள் உள்ளன. மயில் விருத்தத்துக்கும் சேவல் விருத்தத்துக்கும் காப்புச் செய்யுளாக விநாயகர் துதி அமைக்கப்பட்டுள்ளது.
இன்று நாம் காண்பது, மயில் விருத்தத்தின் காப்புச் செய்யுளான விநாயகர் துதியை -
சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்
சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்
கொந்தள பாரகி ராதபு ராதநி கொண்க எனப்பரவுங்
கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்
கந்தக்ரு பாகர கோமள கும்ப கராதிப மோகரத
கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்
தெந்த மகோதர மூஷிக வாகன சிந்து ர பத்மமுகச்
சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/231955592&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

