சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 59

மயில் விருத்தத்தின் காப்புச் செய்யுளைப் பிரித்துப் பொருள் காண்போம்.

Updated On :13 நவம்பர் 2015, 9:05 am

மயில் விருத்தத்தின் காப்புச் செய்யுளைப் பிரித்துப் பொருள் காண்போம்.

பதச் சேதம்

சொற் பொருள்

சந்தன பாளித குங்குமம் புளகித சண்பக கடக புயச்சந்தனம், பாளிதம்: பச்சைக் கற்பூரம், குங்குமம், புளகிதம்: பெருமகிழ்ச்சி, சண்பக (மலர் மாலையையும்) கடகத்தையும் தோளில் அணிந்த (கடகம்: தோள்வளை, வீரர் அணிவது)
சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவு அணியும்சமர: போர்வல்ல, சிகாவலம்: மயில் (தலையில் கொண்டை இருப்பதால் இந்தப் பெயர்), குமர, ஷடாநந: ஆறுமுகா, சரவணா, குரா மலரைச் சூடுபவனே
கொந்தள பார கிராத புராதநி கொண்க எனப் பரவுங்கொந்தளம்: கூந்தல்; கிராத: வேடர் குல; புராதநி: பழையோள்; கொண்க: கணவா!
கூதள சீதள பாதம் எனக்கு அருள் குஞ்சரி மஞ்சரிதோய்

கூதள, கூதாள: நீல சங்குப் பூ

குஞ்சரி: தேவயானை, மஞ்சரி: தளிர் (போன்ற) தோய்: தோயும், தழுவும்,

கந்த க்ருபாகர கோமள கும்ப கர அதிப மோக ரதகந்தா, கிருபாகரா, கோமளம்: அழகு; கும்பகர அதிப: குடம்போன்ற மத்தகத்தை உடைய தலைவா, மோக ரத: விருப்பத்தை ஊட்டுகிற
கர முக சாமர கர்ண விசால கபோல விதான மதமுகத்தில் கையை உடைய, சாமர: சாமரை, கவரியைப் போன்ற; கர்ண: காது உடைய; விசால: அகன்ற; கபோல: கன்ன, விதான மத: பெருகும் மதநீர்
தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்ம முகச்தெந்த: தந்த; மகோதர: பெரிய வயிறு கொண்ட, மூஷிக: பெருச்சாளி; சிந்துர: சிவந்த; தாமரை முக
சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.சிவன் மகன், கணபதி, விக்னங்களைத் தொலைக்கும் விநாயகன். இப்படிப்பட்ட தெய்வத்தின் சகோதரனாகிய முருகனே.

காப்புச் செய்யுளாக விநாயகனைச் சொல்லி அவர் மூலமாகக் கந்தனை வணங்குகிறார். எப்போதும் வண்ணவிருத்தமாகவே அமையும் பாடல்களில் இது அபூர்வமான சந்த விருத்தம். இறுக்கமான தளைக்கட்டுகள் சற்றே தளர்ந்த பாடல் இது.

சரவண குரவணியும் என்கிறாரல்லவா, இது குரவ மலர். நன்றி: http://karkanirka.org/2009/04/23/99tamilflowers_index/

பதவுரை

சந்தன ... சந்தனம்

பாளித ... பச்சைக் கற்பூரம்

குங்குமம் ... குங்குமம் போன்ற வாசனைப் பொருட்களைப் பூசியதும்,

புளகித ... மகிழ்ச்சியை ஊட்டுவதும்,

சண்பக ... சண்பக மாலையை அணிந்துள்ளதும்,

கடக ... தோள் வளைகளை அணிந்துள்ளதுமான,

புய ... திருத் தோள்களை உடைய,

சமர சிகாவல ... போர் வல்லவனே, மயில் வாகனனே,

குமர ... குமாரனே,

ஷடாநந ... ஆறுமுகத்தோனே (ஷட்: ஆறு, ஆனன: முகம்),

குரவு அணியும் ... குரா மலர்களை அணிந்தவளும்,

கொந்தள பார ... பாரமான கூந்தலை உடையவளும்,

கிராத புராதனி கொண்க ... வேடர்குலத்தில் தோன்றிய பழையோளாகிய வள்ளிப் பிராட்டிக்குக் கணவா,

எனப் பரவும் ... என்று போற்றப்படுபவனே,

சரவண ... சரவணப் பொய்கையில் உதித்தவனே,

குஞ்சரி மஞ்சரி தோய் ... ஐராவதமாகிய குஞ்சரத்தால் வளர்க்கப்பட்டவளும், தளிர்போன்ற மேனி நலத்தவளுமான தேவானையைத் தழுவுபவனே,

கந்த ... கந்தா,

கிருபாகர ... கருணையின் உறைவிடமே,

கோமள கும்ப கர அதிப ... அழகான குடம் போன்ற மத்தகத்தை உடையவரும்,

மோக ரத ... விருப்பத்தை ஊட்டுபவரும்

கர முக சாமர கர்ண ... முகத்தில் விளங்கும் கரமான துதிக்கையை உடையவரும் (வீசுகின்ற) கவரியை ஒத்த பெரிய காதுகளை உடையவரும்,

விசால கபோல விதான மத ... அகன்ற கன்னத்தில் மத நீர் பெருக்கை உடையவரும்

எந்தை ... எம் தந்தையாக விளங்குபவரும்,

மகோதர ... பெருத்த வயிற்றைக் கொண்டவரும்,

மூஷிக வாகன ... பெருச்சாளியை வாகனமாக உடையவரும்,

சிந்துர பத்ம முக ... சிவந்த தாமரையைப் போன்ற முகத்தைக் கொண்டவரும்,

சிவ சுத கணபதி ... சிவ குமாரனாகிய கணபதி (என்றும்),

விக்ன விநாயக ... விக்னங்களை நீக்கும் விநாயகர் (என்றும் போற்றப்படும்),

தெய்வ சகோதரனே ... தெய்வத்துக்கு சகோதரனே,

கூதள சீதள பாதம் எனக்கு அருள் ... நீல சங்குப் பூக்களைச் சூடிய உன் குளிர்ச்சியான பாதத்தை எனக்கு அளித்தருள வேண்டும்.

சுருக்கமாக,

சந்தனம் முதலான வாசனைத் திரவியங்களைப் பூசியதும், சண்பகமாலை, கடகம் ஆகியவற்றை அணிந்ததுமான தோளைக் கொண்டவனே! மயிலை வாகனமாக உடைய போர் வல்லனே! சரவணப் பொய்கையில் உதித்தவனே! குரா மலர்களைச் சூடிய பாரமான கூந்தலை உடையவளும் வேடர் குலத்தில் உதித்தவளுமான வள்ளிக்கு மணாளன் என்று போற்றப்படுபவனே! ஐராவதமாகிய யானையால் வளர்க்கப்பட்டவளான தேவானையைத் தழுவி மகிழ்பவனே! கந்தனே! கருணைக்கு உறைவிடமே!

அழகிய குடம்போன்ற மத்தகத்தை உடையரும், தலைவரும் (அதிபர்) விருப்பத்தை ஊட்டக்கூடியதும் தும்பிக்கையோடு கூடியதுமான முகத்தை உடையவரும், வீசப்படும் கவரியைப் போன்ற பெரிய காதுகளை உடையவரும், அகன்ற கன்னத்தில் ஊறுவதான மதப்பெருக்கை உடையவரும், ஒற்றைத் தந்தத்தினரும், பெரிய வயிற்றை உடையவரும், பெருச்சாளி வாகனரும். சிவந்த தாமரையைப் போன்ற மலர்ந்த முகங்கொண்டவரும், சிவகுமாரனுமான, விக்னங்களைக் களையும் விநாயகருடைய சகோதரனே!

நீலச் சங்குப் பூக்களை அணிந்த உன் குளிர்ச்சியான பாதங்களை எனக்கு அளித்ருள்வாயாக.

வள்ளியைப் புராதனி என்று சொல்வது கவனிக்கத்தக்கது. இவள் இளையவளே ஆனாலும் மிகப் பழையோள் என்பது குறிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.