மயில் விருத்தத்தின் முதற்பாடல் தொடங்குகிறது. அருணகிரிநாதர் திரைப்படத்தில் இந்தப் பாடலை அமரர் டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள் இனிமையான பாடலாகக் குழைத்துப் பாடியிருக்கிறார். இதே பாடலை சந்த முறைப்படிப் படித்துப் பயிலலாம். காப்புச் செய்யுள் சந்த விருத்தமாக அமைந்திருந்தாலும், மயில் விருத்தம் முழுமையும் வண்ணவிருத்தமாகவே தொடர்கிறது. மயிலையும், மயிலேறும் முருகனையும் வாழ்த்துகிற இந்தப் பாடலில், கவிஞர்களுக்கே உரிய குறும்பான சாமர்த்தியம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விநாயகன், தாய் தந்தையை வலம் வந்து கனியைப் பெற்றதை வெற்றியாக மற்றவர்கள் வர்ணித்தால், குருநாதர், அதை மயிலுடைய வெற்றியாக மாற்றிக் காட்டும் அபாரமான சித்துவிளையாட்டை இதில் ரசிக்கலாம். இறுக்கமான வடமொழிச் சொற்கட்டில் திருச்செங்கோட்டைப் புதைத்து வைத்திருக்கிறார். இந்திராணியின் மாங்கல்யத்தைக் காத்ததைச் சொல்கிறார். சொற்களின் பின்னலை அப்படியே எடுத்துச் சுவைப்பதில் ஓரின்பமென்றால், அவற்றைப் பிரித்துப் பிரித்தெடுத்துப் பொருள்கண்டு மகிழ்வது வேறுவகையான இன்பம்.
இன்று பாடலைப் படித்து, ஒலிப்பதிவைக் கேட்போம். நாளை பொருளைக் காண்போம்.
சந்தான புஷ்பபரி மளகிண் கிணீமுகச்
சரணயுக ளமிர்தப்ரபா
சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
சத்யப்ரி யாலிங்கனச்
சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
யம்பக விநாயகன்முதற்
சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
சித்ரக் கலாபமயிலாம்
மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
வனசரோ தயகிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்
திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
ரத்னக் கலாப மயிலே.
</p><p><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/232870477&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

