மயில் விருத்தத்தின் மூன்றாம் பாடலுக்கான பொருளையும் திரண்ட கருத்தையும் பார்ப்போம். மயிலுடைய நடனத்தால் பாதாளலோகமும் மூதண்டமும் கிடுகிடுப்பது தொடர்கிறது.
பதச் சேதம் | சொற் பொருள் |
| ஆதார பாதளம் பெயர அடி பெயர மூதண்டம் முகடது பெயரவே | (உலகுக்கு) ஆதாரமான பாதளலோகம், மூதண்டம்: முதியதான, தொன்மையான அண்டம், முகடு: உச்சி |
| ஆடும் அரவம் முடி பெயர எண் திசைகள் பெயர எறி கவுள் கிரிசரம் பெயரவே | ஆடும் அரவம்: ஆதிசேடனுடைய, முடி: உச்சி, கவுள்: யானையின் கன்னம், கிரிசரம்: யானை (விளக்கத்துக்குக் கீழே காண்க) |
| வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார் மிக்க பிரியப்பட | பூதகணங்களுடைய தாளங்களுக்கு ஏற்ப நடனமாடும் நடராசர், மிக்க பிரியப்பட: மிகவும் பிரியம் அடையுமாறு |
| விடா விழி பவுரி கவுரி கண்டு உளமகிழ விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம் | விடா விழி: வைத்தகண் வாங்காத, பவுரி: வட்டமிட்டு ஆடும் கூத்து வகை, கவுரி: கௌரி, விஸ்தார நிர்த்தம்: விரிவான நடனம் |
| மாதாநு பங்கியெனும் மால் அது சகோதரி மகீதரி கிராத குலி | மாதாநுபங்கி: பிரமன் (விளக்கத்துக்குக் கீழே காண்க, மால்: பெருமை(யுடையோன்), கிராத குலி: வேடர் குலத்தில் பிறந்தவள் |
| மாமறை முநி குமாரி சாரங்கம் நம் தனி வந்த வள்ளி மணி நூபுர | மாமறை முனி குமாரி: சிவமுனிவர் புதல்வி (விளக்கத்துக்குக் கீழே காண்க), சாரங்கம்: மான், மணி நூபுரம்: ரத்தினச் சிலம்பு |
| மலர்ப் பாதாரவிந்த சேகரன் நேயம் மலரும் உற்பலகிரி அமர்ந்த பெருமாள் | மலர் பாத அரவிந்த சேகரன்: (வள்ளியுடைய) பாதமாகிய தாமரையை முடியில் தரித்தவன், உற்பலகிரி: நீலோற்பல மலர்கள் பூத்திருக்கும் மலையான திருத்தணியில் வீற்றிருப்பவன் |
| படைநிருதர் கடகம் உடைபட நடவு பச்சைப் பசுந்தோகை வாகை மயிலே. | ஆயுதமேந்திய அரக்கர், கடகம்: சேனை (இது இன்னொரு பொருள்), உடைபட: சிதறிப் போக, நடவு: நடத்துகிற, வாகை: வெற்றி |

ஆதார ... பூமண்டலத்துக்கு ஆதாரமாக விளங்கும்,

பாதாளம் பெயர ... பாதாள லோகம் நடுங்கவும்,

அடி பெயர ... (மயில் தன்னுடைய) பாதத்தை எடுத்து வைத்ததுமே,

மூதண்ட முகடது பெயரவே ... மிகவும் தொன்மையான பிரமாண்டத்தின் உச்சியானது பெயர்ந்து உதிரவும்,

ஆடரவ முடி பெயர ...(இந்த உலகத்தைத் தாங்கியிருப்பவனான) ஆதிசேடனுடைய ஆடுவதான ஆயிரம் முடிகளும் அசையவும்,

எண்திசைகள் பெயர ... எட்டுத் திக்குகளும் நடுக்கமுறவும்,

எறி கவுள் கிரிசரம்* பெயரவே ... (மத நீரைச் சிந்தி) எறிவதான
கன்னங்களை உடைய எட்டு திசைகளைத் தாங்கும் எட்டு யானைகள் (அஷ்டதிக் கஜங்கள்) தம்முடைய இடத்திலிருந்து நகரவும்,

வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார் ... பூத கணங்கள் போடும் தாளங்களுக்கு ஏற்ப நடனமாடும் நடராசர்,

மிக்கப் பிரியப் பட ... மிகவும் விருப்பப்படுமாறும், (நடனத்தின் இறைவனான நடராசரே பிரியப்படும்படியாக நடமிடும் மயில்)

விடா விழி பவுரி கெளரி கண்டு ... (மயிலுடைய நடனத்தை) வைத்தகண் வாங்காமல் பார்க்கும் உமையம்மை,

உள மகிழ ... உள்ளத்தில் களிப்புகொள்ளவும்,

விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம் ... பலவகைகளில் விரிவான ஆட்டத்தை ஆடி விளையாடுகின்ற மயிலாகும்

(இப்படிப்பட்டது யாருடைய மயிலென்றால்)

மாதானு பங்கி எனும் மாலது சகோதரி ... (மாதானுபங்கி என்ற பெயரைக் கொண்ட திருவள்ளுவராக அவதரித்தவரும்) பெருமை மிக்கவருமான பிரமாவின் சகோதரியானவளும்,

(மாதானுபங்கி என்பது பிரமனுக்குரிய பெயரில்லை; சிவனுக்கு உரியது. இந்த மாதானுபங்கிக்கு வள்ளி சகோதரி என்பதனால், வள்ளுவரைக் குறிக்கும் மாதானுபங்கி என்ற பெயரைக் கொண்டு, வள்ளுவராக அவதரித்த பிரமனைச் சுட்டுவதாக அறிகிறோம். இதற்கான திருவள்ளுவ மாலைப் பாடல்களை நேற்று கொடுத்திருந்தோம். வள்ளியை பிரமனின் சகோதரியாக அருணகிரியார் பல பாடல்களில் பாடியுள்ளார். வள்ளுவரைக் குறித்த பலவிதமான நம்பிக்கைகள் திருப்புகழிலும் விரவிக் கிடக்கக் காண்கிறோம்.)

மகீதரி ... மலையில் பிறந்தவளும்,

கிராதகுலி ... வேடர் வம்சத்தில் வளர்ந்தவள் (கிராதர்:வேடர்),

மாமறை முநி குமாரி ... சிறந்த வேதங்களில் வல்லவராகிய சிவ
முனிவரின் புத்திரி,

சாரங்கம் ... மான் வயிற்றில்,**

தனி வந்த ... ஒப்பற்ற வகையில் உதித்த,

நம் வள்ளி ... நமது வள்ளியம்மையின்,

(விநாயகனை மம விநாயக என்பார்; சிவனை 'என் தந்தை சதாசிவ கோத்திரன்' என்பார்; உமா தேவியை 'எமதாயி' என்பார்; அதுபோல நம் வள்ளி என்கிறார்)

மணி நூபுர... ரத்னச் சிலம்புகளை அணிந்துள்ள,

மலர்ப் பாதார விந்த சேகரன் ... (பாத அரவிந்தம்: பாதத் தாமரை) பாதங்களை திருவடியில் சூடியவனான முருகனுடைய,
நேயம் ... அன்பிற்கு உகந்ததாய்,

மலரும் ... பூத்திருக்கும்,

உற்பல கிரி ... நீலோற்பல புஷ்பங்கள் நிறைந்த திருத்தணியில்,

அமர்ந்த பெருமாள் ... வீற்றிருக்கும் பெருமையை உடையவன்,

படை நிருத ... ஆயுதங்களை ஏந்தி வந்த அசுரர்களின்,

கடகம் உடைபட ... சேனைகள் சிதறிப் போகும்படி,

நடவு ... நடத்துகின்ற,

பச்சைப் பசும் தோகை வாகை மயிலே ... பச்சை நிறத்ததான தோகையையுடைய வெற்றி மயிலே அதுவாகும்.

* கிரிசரம், நதிசரம், வனசரம் என்று யானைகள் மூன்று வகைப்படும். மலையில் பிறந்தவை கிரிசரம், ஆற்றுப் படுகைகளில் பிறந்தவை நதிசரம், காடுகளில் பிறந்தவை வனசரம்.

** தான் வைகுந்தத்துக்குப் போனபோது, சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த திருமாலும் திருமகளும் தன்னை உடனடியாக கவனிக்கவில்லையென்று துர்வாசர் சபித்ததால், வள்ளிமலையில் திருமால் சிவமுனிவராகவும் திருமகள் மானாகவும் தோன்றி, சிவமுனிவர் மானைப் பார்த்த அளவிலே கருவுற்று, வள்ளியை ஈன்றதாகப் புராணச் செய்தி.

பாடலின் பொருட் சுருக்கம்

பிரமதேவனின் தங்கையும், மலையில் தோன்றிய வேடர்குலத்தவளும், வேதம் வல்ல சிவமுனிவருடைய பார்வையால் மானிடத்தில் தோன்றியவளுமான வள்ளிப்பிராட்டியின் ரத்னச் சிலம்புகளை அணிந்த பாத தாமரைகளைத் தன் தலையில் விருப்பத்துடன் சூடிய; தனக்குப் பிரியமான நீலோத்பல மலர்கள் பூக்கின்ற திருத்தணியில் வீற்றிருக்கிற கந்தனுடைய மயில் படைகளுடன் வந்த அசுரர் சேனை எல்லாவற்றையும் பொடிபடுமாறு நடத்திய வெற்றி மயிலாகும். அதுவே,

ஆதாரமான பாதாள உலகங்கள் அசையவும், பழமையான பிரமாண்டத்தின் உச்சி பெயரவும், மதம் பொழிகின்ற எட்டுதிசை யானைகள் தங்கள் இடத்தைவிட்டு நகரவும், பூதகணங்களின் தாளத்துக்கேற்ப நடனமாடும் நடராசப் பெருமான் விரும்புமாறு ஆடி, அந்த ஆட்டத்தை உமாதேவியார் கண்கொட்டாமல் பார்த்து மகிழ்கின்றவாறு, தன் பச்சைத் தோகையை விரித்தாடும் மயிலுமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை