மயில் விருத்தத்தின் ஐந்தாம் பாடலில், மயில் அண்டங்கள் நடுநடுங்க, திக்குகள் கிடுகிடுக்கப் பறப்பது மட்டுமன்றி, முட்டைகளைப்போல எங்கெங்கும் நிறைந்திருக்கிற பற்பல கோள்களையும் இன்னபிற உடுக்களையும், தன் சிறகால் அணைத்து—அடைகாப்பதைப்போல்—காக்கவும் செய்வதைப் பார்க்கிறோம். அதுவும், கொடுஞ்சிறகினால் காக்கிறதாம். முந்தைய பாடலில் நரசிம்மம் அவுணர்களைப் பிளக்க, மயில் பறக்கும்போது அண்டங்கள் நடுங்கின. இந்தப் பாடலில் அன்னையின் பெயர்வரிசை இலங்க, மயில் அண்டங்களை அணைத்துக் காக்கிறது. இந்தப் பாடலின் இறுதியில் காணப்படும் கோதண்டம் என்பது வில்லுக்கான பொதுப்பெயர். இதன் விளக்கத்தை நாளை காணலாம். இப்போது பாடலும் பதிவும்:

சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி

நயதுல்ய சோம வதன

துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம

சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள்

யாவுங் கொடுஞ்சி றகினால்

அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே

அணைக்குங் கலாப மயிலாம்

நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி

நித்தரும் பரவு கிரியாம்

நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்

நிர்வியா குலன்சங் குவாள்

மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்

மாதவன் முராரி திருமால்

மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்

வரமுதவு வாகை மயிலே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை