தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 22

மேருமலையைப் போல அளவில் மிகப் பெரியதாகிய கருணையாகிய மலையே! தேவர்களுடைய தலைவனே!

Updated On :7 அக்டோபர் 2015, 4:52 am

மௌனாலயப் பாடலின் பொருளைப் பார்ப்போம். முதலில் இந்தச் சந்தக் கட்டை உடைத்துச் சற்றுக் கலைத்துப் போடுவோம்.

பாடல் சேதம்

பொருள் சாரம்

அகலம் நீளம் யாதாலும்நீள அகலங்கள் எதனாலும்
ஒருவராலும் ஆராய அரியயாராலும் ஆராய்வதற்கு அரிய
மோனமே கோயில் என மேவிமௌனமே கோவில் என மேவி

அசையவே(மனம்) அசைந்து, சலனப்பட்டு
க்ரியாபீடம் மிசைபுகாகிரியா (மார்க்கத்து) பீடத்தில் ஏறாமல்
மகாஞான அறிவின்மிகவும் உயர்ந்த ஞான, அறிவால்
ஆதர ஆமோத மலர் தூவிஅன்பு மகிழ்ச்சி (எனப்படும்) மலர்களைத் தூவி

சகல வேதன(ம்) அதீதம்எல்லா வேதங்களுக்கும் மேற்பட்டதும்
சகல வாசக அதீதம்எல்லா வாக்கியங்களுக்கும் மேற்பட்டதும்
சகல-மா க்ரிய அதீத சிவரூபஎல்லாப் பெரும் செய்கைகளுக்கும் மேற்பட்டதான, சிவ ரூபமான,

சகல சாதக அதீதஎல்லா (ஜாதக) பிறப்புக்கும் மேற்பட்டதும்
சகல வாசனா அதீதஎல்லா (வாசனா) அனுபவச் செறிவுக்கும் மேற்பட்டதுமான
தனுவை நாடிபுருவ மத்தியை (தநு: புருவ மத்தி) நாடி
மாபூசை புரிவேனேபெரிய பூஜையைச் செய்வேனா.

விகடதார (விகடதர)மாறுபாடு உள்ள
சூதான நிகள பாத போதூள விரகவஞ்சகமுள்ள, (நிகள பாத) பந்தத்தில் விழுவதை (போதூள) அழியும்படி (விரக) துன்பப்படுத்துவனே
ராக போதார்ஆசைகளை (அனுபவிப்பதில் பொழுதைப்) போக்குபவர்களான
அசுரர் கால!அசுரர்களுக்கு எமனானவனே!

விபுத! மாலிகா!(விபுத) தேவலோக (தேவதாரு) (மாலிகா) மாலை அணிந்தவனே
நீலமுக படாக மாயூர! (மயூர)(நீலமுக) நீலத் தோற்றமுள்ள (படாக) திரைச்சீலையைப் (போர்த்தியது போன்ற) மயூர! (மயில் வாகனனே)
விமல! வ்யாபகா சீல அக!பரிசுத்தனே! (வியாபக) எங்கும் நிறைந்தவனே (Omniscient)! சீலம் நிறைந்த உள்ளத்தவனே!
விநோத!அற்புத மூர்த்தியே

ககன கூடவிண்ணுலகில் (உள்ள)
பாடீர தவள சோபித(பாடீர) சந்தன[ம் பூசிய] (தவள) வெண்ணிற (சோபித) அழகை உடைய,
ஆளானஉனக்கு ஏவல் புரிவதும்
கவன பூதரம் ஆரூட!(கவன) வேகமாக (பூதர) ஐராவதம் அல்லது பிணிமுகம் என்ற பெயரையுடைய (ஆரூட) எழுந்தருளுபவனே!

சதகோடி களபகாம வீர்!நூறுகோடி களபக் கலவைச் சாந்தை (அணிந்த) மன்மதன்களை (ஒத்தவனே)
வீசு கரம் முக! ஆர!(கரம்வீசும் முக!) ஒளிக்கிரணங்களை வீசும் (சூரியனைப் போன்ற) முகமுடையவனே! மாலையணிந்தவனே!
வேல் வீர!வேல் ஏந்திய வீரனே!
கருணை மேருவே!கருணையில் மேருவைப் போல உயர்ந்தவனே!
தேவர் பெருமாளேதேவர்களுக்கு அதிபதியே!

அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய - இத்தனை நீளம், இத்தனை அகலம் என்று யாராலும் ஆராய்ந்த சொல்ல முடியாத

மோனமே கோயில் என மேவி - மௌன நிலையையே என் ஆலயம் என்று கொண்டு அங்கே அடைந்திருந்து

அசையவே க்ரியா பீடம் மிசை புகா - மனத்தில் அசைவேற்பட்டு, சலனவசப்பட்டு, கிரியை மார்க்கத்தை அனுசரித்து அதைப் பெரும்பீடமாக ஏற்றிவிடாமல்

மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி - மிகப்பெரிய மெய்ஞானமாகிய அறிவோடு, (ஆதர) அன்பு (ஆமோத) மகிழ்ச்சி என்ற மலர்களைத் தூவி,

சகல வேதன(ம்) அதீத சகல வாசக(ம்) அதீத - எல்லா வேதங்களுக்கும், எல்லா வாக்கியங்களுக்கும் (சொற்களுக்கும்) மேம்பட்ட (அதீத)

சகல மா க்ரிய அதீத சிவரூப - எல்லாவிதமான சிறந்த செயல்களுக்கும் (க்ரியா) மேம்பட்ட (அதீத) சிவரூபமான,

சகல சாதக அதீத சகல வாசன அதீத - எல்லா (ஜாதக) பிறவிகளுக்கும், எல்லா வகையான அனுபவச் செறிவுக்கும் மேற்பட்டதான

வாசனா என்பது பலவிதங்களான அனுபவங்களின் திரட்சி.

வாசனாத் வாசுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம்

ஸர்வபூத நிவாஸ்வோஸி வாசுதேவ நமோஸ்துதே என்பார்கள். வாசனைகளை ஆள்பவன் வாசுதேவன்.

தனுவை நாடி மா பூசை புரிவேனோ - புருவ மத்தியில் மனத்தை நிலைநிறுத்தி, பெரும்பூசையைச் செய்யும் பாக்கியத்தை அடைவேனோ!

விகட தார சூதான நிகள பாத போதூள - (விகடதார அல்லது தர) மாறுபட்டதும், வஞ்சகம் நிறைந்ததுமான (நிகளபாத போதூள) பந்தத்தில் அகப்பட்டு விழுவதை அழித்துத் தூளக்குபவனே!

விரகர் ராக போதார் அசுரர் கால - (விரகர்) தந்திரம் உடையவர்களும் (ராக) ஆசை அல்லது காமம் கொண்டு அதனை அனுபவிப்பதில் (போதார்) போகின்ற அசுரர்களுக்கு யமனாக நின்று அழிப்பவனே!

விபுத மாலிகா நீல முக படாகம் மாயூர - தேவதாரு மலர் மாலையை அணிந்தவனே! (படாம் யானையின் நெற்றியில் அணிவிக்கும் அலங்கார மறைப்பு, அல்லது போர்வை) நீலநிறத்தில் போர்வையைப் போர்தியது போன்ற உடலமைப்பைக் கொண்ட மயில் வாகனனே!

விமல வ்யாபகா சீல அக விநோத - பரிசுத்தமானவனே, எங்கும்
நிறைந்திருப்பவனே, நற்குண உள்ளத்தவனே, அற்புத மூர்த்தியே,

ககன கூடம் பாடீரம் தவள சோபித ஆளான - விண்ணுலகத்தைச் சேர்ந்த சந்தனக் (பாடீரம்) குழம்பைப் பூசியதும், (தவள சோபித) வெண்ணிறத்தால் பிரகாசிக்கும் (ஆளான) ஏவல் செய்வதும்

கவனம் பூதரம் ஆரூட - வேகமாகச் செல்வதும், (பூதரம்: மலை) மலை போன்றதுமான (ஐராவதம் அல்லது பிணிமுகம் எனப்படும்) யானையில் அமர்ந்த கோலத்தில் விளங்குபவனே! (ரிஷபாரூடர், கருடாரூடர் என்பதைப்போல் இவன் பூதராரூடன்).

சத கோடி களப காம வீர் - (வீர என்பது வீர் என்று வந்திருக்கிறது) (களப) கலவைச் சாந்து அணிந்த நூறுகோடி (காமவீர்) மன்மதன்களுக்கு ஒப்பான வீரனே!

வீசு கரம் முக ஆர வேல் வீர - கதிரொளியை வீசும் முகங்களைக் கொண்டவனே! ஆர! கடப்பமாலை அணிந்தவனே! வேல் வீரனே!

கருணை மேருவே தேவர் பெருமாளே. - மேருமலையைப் போல அளவில் மிகப் பெரியதாகிய கருணையாகிய மலையே! தேவர்களுடைய தலைவனே!

தேவர்களுடைய யமனே! மயில் வாகனனே! என் மனம் மௌனமாகிய ஆலயத்தில் குடியிருந்தது நிலைகுலைந்து நான் கிரியாமார்க்கங்களில் புகாமல், புருவமத்தியில் கவனத்தை நிறுத்தி தியானித்து, அந்த தியானமே உனது பூசையாகச் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ!

பலன் நாடுவோர், இந்தப் பாடலை ஞான பூசை செய்யும் பாக்கியத்துக்காக ஓதுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.