நேற்றைய பாடலின் பொருளை இப்போது காண்போம்.

பாடல் சேதம்

பொருள் சாரம்

பத்தர் கண ப்ரிய!

பக்தர்கள் கூட்டத்தை விரும்புபவனே!

நிர்த்த(ம்) நடித்திடு பட்சி நடத்திய குக!

நாட்டியம் ஆடுவதாகிய மயிலை வாகனமாகக் கொண்டவனே! குகா!

பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்கு உ(ள்)ள பக்தர்கள்

(பூர்வ) கிழக்கு (பச்சிம) மேற்கு (தட்சிண) தெற்கு (உத்தர) வடக்கு திக்குகளில் உள்ள பக்தர்கள் (எல்லோரும்)

அற்புதம் என ஓதும்

அற்புதம் என்று சொல்வதாகிய

சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழைச் சிறிது அடியேனும்

அழகிய கவித்துவத்தின் ஓசை நயம் மிகுந்ததாகிய திருப்புகழை, அடியேனும் சிறிது

செப்பு என வைத்து உலகில் பரவ

சொல்லும்படி வைத்து (அதனை) உலகில் பரவச் செய்து

தெரிசித்த அநுக்ரகம் மறவேனே

(அந்தப் பாக்கள் மூலமாக நீ) வெளிப்படுத்திய அனுக்கிரகத்தை என்றும் மறவேன்.

கத்திய தத்தை களைத்து விழ, திரி கல் கவண் இட்டு எறி

கீச்சிடும் கிளிகள் சோர்ந்து விழும்படியாக, சுழல்வதான கவணில் கல்லை இட்டு வீசி

தினைகாவல் கற்ற குறத்தி

தினைப்புனத்தைக் காவல் காக்கும் (வித்தையைக்) கற்ற குறத்தியான வள்ளியின்

நிறத்த கழுத்து அடி

ஒளி பொருந்திய கழுத்துக்கு அடியிலே

கட்டி அணைத்த ப(ன்)னிரு தோளா

கட்டித் தழுவிய பன்னிரண்டு தோள்களை உடையவனே!

சத்தியை, ஒக்க இடத்தினில் வைத்த தகப்பன் மெச்சிட

பராசக்தியை, தன்னை ஒக்க இடது பக்கத்தில் வைத்தவனான சிவனாகிய தந்தை மெச்சும்படியாக

மறை நூலின்

வேதங்களின்

தத்துவம் தற்பரம் முற்றும் உணர்த்திய

(தத்துவம்) மெய்ப்பொருள் (தற்பரம்) பரம்பொருள் அனைத்தையும் போதித்து உணர்த்தியவனே!

சர்ப்ப கிரி சுரர் பெருமாளே

சர்ப்பகிரி என்பதாகிய திருச்செங்கோட்டில் தேவர்களுக்கும் இறைவனாக வீற்றிருப்பவனே.

பத்தர் கண ப்ரிய = பக்தர் கூட்டங்களின்மேல் அன்பு செலுத்துபவனே. நிர்த்தம் நடத்திடு = நடனம் செய்ய வல்ல. பட்சி நடத்திய குக = பட்சியாகிய மயிலை வாகனமாகக் கொண்ட குகனே. (நடத்துதல் = வாகனமாகக் கொண்டு செலுத்துதல்)

பூர்வ = கிழக்கு. பச்சிம = மேற்கு. தட்சிண = தெற்கு. உத்தர = வடக்கு (ஆகிய). திக்கு உள்ள பத்தர்கள் = திசைகளில் வாழும் பத்தர்கள். அற்புதம் என ஓதும் = இது அற்புதமானது என்று கொண்டாடும்.

சித்ர கவித்துவ = அழகிய கவித்துவம் நிறைந்ததும். சத்தம் மிகுத்த = சந்த நயங்கள் மிகுத்ததுமான. திருப்புகழை = திருப்புகழ் என்ற நூலை. சிறிது அடியேனும் = அடியேனும் சிறிய அளவில் (ஓரளவுக்கு).

செப்பு என = சொல்லுமாறு பணித்து (திருவருள் செய்ததையும்) உலகில் பரவ = (அந்தப் பாக்கள்) இந்த உலகில் பரவும்படியாகச் (செய்து). தெரிசித்த = (அந்தப் பாக்களின் சொரூபத்தை அனைவரும் உணரும்படி) தரிசனப்படுத்திய, (வெளிப்படுத்திய). அநுக்கிரகம் = நீ அனுக்கிரகித்ததை (அருளியதை) மறவேனே = நான் மறக்க மாட்டேன்.

கத்திய தத்தை = கத்துகின்ற கிளிகள். களைத்து விழ = சோர்ந்து விழும்படியாக. திரி = சுழற்றுகிற. கல் கவண் இட்டு எறி = கவணில் கல்லை வைத்து வீசியெறிந்து. தினை காவல் = தினைப்புனத்தைக் காவல் செய்வதைக்

கற்ற குறத்தி = கற்ற குறமகளான வள்ளியின். நிறத்த கழுத்து அடி = ஒளி பொருந்திய கழுத்தின் அடிப்பகுதியில் கட்டி அணைத்த பன்னிரு தோளா = பன்னிரு தோள்களாலும் தழுவிக் கொண்டவனே!.

சத்தியை = (தாயாகிய) பராசக்தியை. ஒக்க இடத்தினில் வைத்த = இடது பக்கத்தில் சம இடத்தைக் கொடுத்த தகப்பனும் * மெச்சிட = தந்தையாகிய சிவபெருமானும் மெச்சும்படி. மறை நூலின் = வேத நூலின்.

தத்துவம் = உண்மைப் பொருள். தற்பரம் = பரம் பொருள் (ஆகிய). முற்றும் உணர்த்திய = அனைத்தையும் போதித்து விளக்கிய. சர்ப்ப கிரி = பாம்பு மலையாகி திருச்செங்கோட்டில் உறைபவனே!. சுரர் பெருமாளே = தேவர்கள் தலைவனே!

இந்தப் பாடலில் இதே கருத்தை எதிரொலித்திருந்தாலும், இதற்கு மாறான கருத்தை முன்வைத்திருப்பவரும் அருணகிரியார்தான்; அருணகிரி ஒருவர்தான்.

மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றுவன்வந் தாலென்முன்னே

தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்

த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்

பாகத்தில் வைக்கும் பரம கல்யாணிதன் பாலகனே.

என்றும்,

ஒருவரைப் பங்கி லுடையாள் குமாரன்

என்றும், சிவனைத் தன் வலது பாகத்தில் வைத்த உமை என்று அம்மையைச் சிறப்பிக்கிறார்.

எடுத்துக்காட்டாக,

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன

அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்

கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்

பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

என்று தேவாரம் குறிப்பிடும்போது (இப்படியே மற்ற நூல்களும் குறிப்பிடும்போதும்) ‘பெண்மை உடையன்’ என்பதனால் ஐயன் உடையவனாகவும் அம்மை உடைமைப் பொருளாகவும் ஆகின்றனர். கந்தரலங்காரத்தில் அருணகிரி பாடும் முறைமையால் அம்மை உடையவளாகவும் ஐயன் உடைமைப் பொருளாகவும் வடிவெடுக்கும் ஆச்சரியத்தை என்னென்று சொல்வது!

இன்றைய பாடலின் சுருக்கமான உரை

அடியார்கள் கூட்டத்தில் அன்பு வைப்பவனே! நடமாடும் மயிலை வாகனமாகக் கொண்டவனே! அனைத்து திசைகளையும் சேர்ந்த பக்தர்கள், ‘அற்புதம், அற்புதம்’ என்று வியக்கும் திருப்புகழை அடியேனும் சிறிதளவு ஓதும்படிச் செய்து, அதனால் அது உலகில் பரவும்படிச் செய்து, அதன் கீர்த்தியையும் சீர்த்தியையும் நீ வெளிப்படுத்தியருளியதை நான் எப்படி மறப்பேன்!

கிளிகள் சோர்ந்து விழும்படி கவணில் கல்லை இட்டு எறிந்து தினைப்புனத்தைக் காக்கும் வள்ளியின் அழகிய கழுத்தின் அடிப்பக்கத்தில் பன்னிரு கரங்களாலும் அணைத்தவனே! பார்வதியை இடது பக்கத்தில் வைத்திருக்கும் தந்தைக்கு வேதப் பொருளை முழுவதும் உபதேசித்தவனே! பாம்பு மலையாகிய திருச்செங்கோட்டில் வீற்றிருப்பவனே! தேவர்களுடைய தலைவனே! உன் திருவருளை என்றும் மறவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை