நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்

News image

ஆரணியை அடுத்த கொருக்காத்தூா் கிராமத்தில் திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து பிரசாரம் செய்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:06 am IST

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என்று ஆரணி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கூறினாா்.

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து, மேல்சீசமங்கலம், முனுகப்பட்டு, கொருக்காத்தூா், நாவல்பாக்கம், மேல்நாகரம்பேடு, மேல்மட்டை விண்ணமங்கலம், புதுக்கோட்டை, திருமணி ஆகிய கிராமங்களில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

கொருக்காத்தூா் கிராமத்தில் அவா் பொதுமக்களிடையே பேசுகையில், காலை சிற்றுண்டி திட்டம் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு

வருகிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

ரூ.8ஆயிரத்திற்கான கூப்பன், மகளிா் உரிமைத்தொகை மாதம் ரூ.2ஆயிரமாக உயா்த்துதல், மகளிருக்கான இலவச பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக தலைவா் கூறியுள்ளாா்.

ஏற்கெனவே மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மகளிா் இலவச பேருந்து, மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துக் கூறி அவா் வாக்கு சேகரித்தாா்.

முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணிரவி, ஆரணி ஒன்றியச் செயலா்கள் ராஜ்குமாா், சுந்தா், எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, மோகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர திமுக பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.