தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 25

இன்றைய பாடல், திருவேரகம் எனப்படும் சுவாமிமலைத் திருப்புகழ். திருப்புகழ் அன்பர்கள் பெரிதும் உவக்கும் பாடல்களில் இதுவுமொன்று. என்னுள்ளம் உருகிடும்படியாக திருச்சபையில் வந்து காட்சி கொடுத்தருள வேண்டும் என்று பாடுகிறார்.

Updated On :8 அக்டோபர் 2015, 2:28 pm

இன்றைய பாடல், திருவேரகம் எனப்படும் சுவாமிமலைத் திருப்புகழ். திருப்புகழ் அன்பர்கள் பெரிதும் உவக்கும் பாடல்களில் இதுவுமொன்று. என்னுள்ளம் உருகிடும்படியாக திருச்சபையில் வந்து காட்சி கொடுத்தருள வேண்டும் என்று பாடுகிறார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்றார் வள்ளுவர். அன்பென்ற நீர்ப்பொருளை அடைப்பதற்கான தாழ்மரம் (Sluice gate) எதுவுமில்லை. அந்த அன்புதான் கண்ணில் சிறுதிவலை நீராக வெளிப்படுகிறது என்றார். அருணகிரிநாதருடைய அன்பு வெளிப்படுவதோ சிறு திவலையாக இல்லை, குதித்துப் பாயும் வெள்ளமாக வருகிறது. பாடலில், ‘புளகிதம் எழ, இருவிழி புனல் குதிபாய’ என்று வரும் இடம் அன்பர்களால் பெரிதும் உவந்து பேசப்படும் இடங்களில் ஒன்று. கண்ணிலிருந்து நீர் குதித்துப் புறப்பட்டுப் பாய்கிறதாம். இவருடைய ஆர்வம் கண்ணீராக குதிபோட்டுக் கொண்டு பீறிட்டு வெளிப்பட, இறைவன் எப்படிக் காட்சியளிக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார்.

பாடலை இன்று படித்துக் கேளுங்கள். பொருளை நாளைக்கு விரிவாகப் பார்க்கலாம்.

 தந்தத் தனதன தனதன தனதன

 தந்தத் தனதன தனதன தனதன

 தந்தத் தனதன தனதன தனதன தனதான

 எந்தத் திகையினு மலையினு முவரியி

 னெந்தப் படியினு முகடினு முளபல

 எந்தச் சடலமு முயிரியை பிறவியி னுழலாதே

 இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி

 னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு

 என்சித் தமுமன முருகிநல் சுருதியின் முறையோடே

 சந்தித் தரஹர சிவசிவ சரணென

 கும்பிட் டிணையடி யவையென தலைமிசை

 தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் குதிபாயச்

 சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு

 னந்தத் திருநட மிடுசர ணழகுற

 சந்தச் சபைதனி லெனதுள முருகவும் வருவாயே

 தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி

 தந்தத் தனதன டுடுடுடு டமடம

 துங்கத் திசைமலை யுவரியு மறுகச லரிபேரி

 துன்றச் சிலைமணி கலகல கலினென

 சிந்தத் சுரர்மல ரயன்மறை புகழ்தர

 துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு மயில்வேலா

 கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி

 யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத

 கந்தப் பரிமள தனகிரி யுமையரு ளிளையோனே

 கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்

 அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்

 கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய பெருமாளே.

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.