நேற்றைய திருவேரக (சுவாமிமலை) திருப்புகழைப் பிரித்துப் போட்டு, சொல் சொல்லாகப் பொருள் பார்ப்போம். அதற்கு முன்னால், ‘சபையிலே வெளிப்பட்டு காட்சி கொடுத்தருள வேண்டும்’ என்று இந்தப் பாடலைப் பாடிய சந்தர்ப்பத்தையும் பார்ப்போம்.
மன்னன் பிரபுடதேவனிடத்திலே சம்பந்தாண்டான் என்ற புலவன் அருணகிரிநாதரின்மேல் வெறுப்புண்டாக்குவதற்காக, ‘இவரால் பாடி, இவருடைய முருகனைக் காட்சியளிக்கச் செய்யமுடியுமா’ என்று சவால் விட்டு, சம்பந்தாண்டான் காளியை நேரில் வரவழைப்பதாகவும் சொல்லி, அருணகிரிநாதர் பல பாடல்களைப் பாடியும் முருகன் உமையம்மையின் மடியில் சிக்கியிருந்ததால் வராமல் போக, அருணகிரிநாதர் வேல் விருத்தம், மயில் விருத்தம் முதலான பல பாடல்களைப் பாடி முருகனை அழைக்கிறார். கடைசியில் கந்தன், அனைவரும் கூடியிருந்த சபையிலே தூணில் காட்சியளித்தான். அந்த இடம்தான் திருவண்ணாமலை ஆலயத்தில் கம்பத்திளையனார் சன்னதியாக விளங்குகிறது. சம்பந்தாண்டானுடன் நிகழ்ந்த வாதின்போது பாடிய பல பாடல்களில் ஒன்று இது. இந்தப் பாடல்களில் ‘அதலசேட னாராட’ முதல் பல அடங்குகின்றன. ‘சபையிலே எழுந்தருள வேண்டும்’ என்று சுவாமிமலை நாதனைப் பாடிய பாடலை இப்போது பார்க்கலாம். கீழேயுள்ளது, எப்படிப் பிரித்து பொருளை அடைகிறோம் என்பதற்கான வழிமுறை. இந்த வழிமுறையிலிருந்து பெற்ற திரண்ட கருத்து இதற்குக் கீழே தரப்படுகிறது.

பதச் சேதம்

பொருள் சாரம்

எந்த திகையினும் மலையினும் உவரியின் எந்தப் படியினும் முகடினும்

எந்த திசையிலும் (திகையிலும்), மலையிலும், கடல் சூழ்ந்த எந்த உலகிலும் (படி: பூமி, உலகு) எந்த மலைச் சிகரத்திலும்

எந்தச் சடலமும் உயிர் இயை பிறவியில் உழலாதே

உயிரோடு ஒன்றுகலந்து (நடமாடும் பலவிதமான) உடல்(களைக் கொண்ட பல) பிறவிகளில் பிறந்து நான் அவதியுறாமல்

இந்தச் சடம் உடன் உயிர் நிலைபெற

இப்போது எடுத்துள்ள இந்த உடலில் உயிர் நிலைபெற்றிருக்கும்போதே

நளினம் பொற் கழல் இணைகளில் மருமலர் கொடு

(நளினம்) தாமரையை ஒத்த பொற்பாதங்கள் இரண்டிலும் வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டு

என் சித்தமும் மனமும் உருகி நல் சுருதியின் முறையோடே

என் சித்தமும் மனமும் உருகி, வேதங்கள் சொல்கின்ற முறைப்படி,

(சுருக்கம்) எல்லா வகை உலகங்களிலும் உள்ள பலவிதமான உடல்களைக் கொண்ட பிறவிகளை நான் எடுத்து அல்லல் உறாமல், இந்தப் பிறவியிலேயே, உன்றன் தாமரைப் பொற்பாதங்களில் மலர்தூவி அர்ச்சித்து,

சந்தித்து அரஹர சிவசிவ சரண் எனக் கும்பிட்டு, இணை அடி அவை, என் தலைமிசை தங்க,

(இறைவா உன்னை எதிரில்) பார்த்தும், அரஹர, சிவசிவ சரணம் என்று (கும்பிட) உன் பாதங்கள் என் தலையிலே படிய (அதனால்)

புளகிதம் எழ, இருவிழி புனல் குதிபாய.

(புளகிதம்) மயிர்க்கூச்சம் எழவும், கண்களிலிருந்து நீர் வெள்ளமாய் குதிபோட்டுக் கொண்டு பாயவும்

சம்பைக் கொடி இடை விபுதையின் அழகுமுன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற

(சம்பை) மின்னல் (போன்ற) கொடியிடை (உள்ளவளான) (விபுதை) தேவதை(யான தேவயானையின்) முன்னால், அழகாக நடனமிடுகிற உன் பாதங்கள்

சந்தச் சபைதனில் எனது உளம் உருகவும் வருவாயே

இந்த அழகிய சபையிலே என் உள்ளம் உருகுமாறு வந்து காட்சியளிக்க வேண்டும்.

சுருக்கம்: உன்னை நேரில் கண்டு, அரஹர சிவசிவ என்று துதிக்க, உன் பாதங்கள் என் தலையில் பதிய, அதனால் எனக்கு உடலில் மயிர்க்கூச்சம் எடுத்து கண்ணீர் வெள்ளம்போல குதிபோட்டு வெளிப்பட, கொடியிடையாளான தேவயானையின் முன்னால் அழகாக நடமிடும் உன் பாதங்கள், (அதே தாள லயத்துடன் ஜதிபோட) இந்தச் சபையில் என் உள்ளம் உருகுமாறு, இங்கே கூடியுள்ள அனைவருக்கும் தெரிசனம் கிடைக்குமாறு வந்தருள வேண்டும்.

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம

என்ற தாள லயத்தில்

துங்க திசை மலையும் உவரியும் மறுக,

உயர்ந்த திசைகளும் மலைகளும் கடலும் கலங்குமாறு (எழும்)

சல்லரி, பேரி துன்ற

கைத்தாளமும், பேரிகையும் நெருங்கி (ஒலிக்க)

சிலை மணி கலகலகலின் என சிந்த

உன் வில்லில் கட்டிய மணிகள் கலகலகல என ஒலிக்க

சுரர் மலர

தேவர்கள் பூத்தூவ (மலர என்று வினைச்சொல்லாகப் பயன்பட்டுள்ளது)

அயன் மறை புகழ் தர

பிரமன் வேதங்களை ஓதி உன் புகழைச் சொல்ல,

துன்புற்ற அவுணர்கள் நமன் உலகு உற விடும் அயில் வேலா

துன்பம் அடைந்தவர்களான அரக்கர்கள் யமன் உலகை அடையுமாறு செலுத்தும் கூர்மையான வேலை உடையவனே

கந்த சடை முடி கனல் வடிவு அடல் அணி எந்தைக்கு

(கந்த) நறுமணமுள்ள சடாபாரமும் நெருப்பைப் போன்ற திருவுருவத்தையும் வெற்றியையும் உடைய எந்தையான சிவனுக்கு

உயிர் எனும் மலை மகள்

உயிராக விளங்கும்…

மரகத கந்த பரிமள தன கிரி உமை அருள் இளையோனே

பச்சை நிறத்தையும் நறுமணம் கமழும் சந்தனக் கலவை அணிந்த மார்பகத்தை உடையவருமான உமாதேவியார் பெற்ற இளைய மகனே!

கஞ்ச பதம் இவர் திருமகள் குல மகள்

தாமரைப் பீடத்திலே அமர்ந்திருக்கும் இலக்குமியான குலமகள்,

அம் பொன் கொடி இடை புணர் அரி மருக

நல் பொழில் திகழ் குரு மலை மருவிய பெருமாளே

அழகிய பொன் கொடியைப் போன்ற இடையையுடவர் சேர்ந்திருக்கும் திருமாலுடைய மருமகனே! நல்ல சோலைகள் விளங்கும் சுவாமி மலையில் (குரு மலையில்) வீற்றிருக்கும் பெருமாளே.

எந்தத் திகையினும் = எந்தத் திசையிலும். மலையினும் = மலையிலும். உவரியின் = கடல் சூழ்ந்த. எந்தப் படியினும் = எந்தப் பூமியிலும். முகடினும் = வீடு, மலை உச்சிகளில். உள பல = வசிக்கும் பல வகையான. எந்தச் சடலமும் = உயிர் இயை = உடலில் வாழும் உயிருள்ள (சடலம் என்றால், உடல், body என்று பொருள். உயிரற்ற உடல் என்று இந்நாளில் பொருள் கொள்கிறோம். உயிர் அமைந்ததாகிய உடல் என்னும் பொருளில் உயிர் இயை சடலம் என்கிறார்.) பிறவியின் = எந்த பிறப்புக்களிலும். உழலாதே = (நான்) உழன்று திரியாமல்.

நான் எந்த வகையான பிறப்பையும் அடையாமல்,

இந்தச் சடமுடன் உயிர் நிலை பெற = இந்த உடலில் இருக்கும் போதே என் உயிர் நிலை பெறுவதற்காக. நளினம் பொன் கழல் இணைகளில் = (உன்) தாமரைத் திருவடிகளில். மரு மலர் கொடு = மணமுள்ள மலர்களைக் கொண்டு. என் சித்தமும் மனமும் உருகி = என் சித்தமும் மனமும் உருகி. சுருதியின் முறையோடே = சிறந்த வேதங்களால் சொல்லப்பட்ட வழியே (உன்னை).

இந்தப் பிறப்பில் அடைந்துள்ள இந்த உடலில் என் உயிர் தங்கியிருக்கும்போதே, வேதங்களில் சொல்லியிருக்கும் வழியில் உன் பாதங்களில் மணமுள்ள மலர்களைக் கொண்டு அர்ச்சித்து என் சித்தமும் மனமும் உருகி நிற்க,

சந்தித்தும் = சந்தித்தும். அரஹர சிவசிவ சரண் என = அரகர சிவ சிவ சரணம் என்று. கும்பிட்டு = (நான்) வணங்கி வழி பட. இணை அடி அவை = உன் திருவடிகளை. என் தலை மிசை = என்னுடைய தலை மேல். தங்க = பொருந்த. புளகிதம் எழ = என் உடல் புளகிதம் கொள்ள. இரு விழி = இரண்டு கண்களிலும் (ஆனந்தக் கண்ணீர்). புனல் = வெள்ளம் போல. குதி பாய = குதித்துப் பாய.

உன்னை நேரில் கண்டு இன்புற்றும், அரஹர சிவசிவ சரணம் என்று கும்பிட்டும் (தந்தை ஐம்முகச் சிவன் என்றால் கந்தன் அறுமுகச் சிவன். இருவரும் சிவமே) நான் நிற்கையில் உன் பாதம் என் சென்னியில் பொருந்தவும், உடல் புளகாங்கிதம் (மயிர்க்கூச்சம்) அடைந்து, கண்ணீர் வெள்ளமென குதித்துப் பாயவும்,

சம்பை = மின்னல் போன்ற (சம்பை என்ற சொல்லுக்கு மின்னல் என்று பொருள். ஜம்பை என்ற தாளத்தையும் சம்பை என்று குறிப்பதுண்டு. அது வேறு.) கொடி இடை = கொடி போன்ற இடையை உடைய. விபுதையின் = தேவசேனையின் (விபுதன்=தேவன், விபுதை=தேவதை). முன் நந்த = அழகு முன்னே விளங்க. திரு நடம் இடு = அழகிய நடம் புரியும். சரண் அழகுற = (உனது) திருவடி அழகுடன் பொலிய. சந்தச் சபை தனில் = (இந்த) அழகிய சபையில். எனது உள்ளம் உருகவும் = எனது உள்ளம் உருகவும். வருவாயே = வந்தருள்வாயாக.

மின்னல்போன்ற கொடியிடையாளாகிய தேவசேனையின் முன்னால் தாளலயத்தோடு நடனம் புரியும் உன் திருப்பாதங்களை எடுத்து வைத்து இந்தச் சபையில் எல்லோரும் காணுமாறு தரிசனம் தந்தருள வேண்டும்.

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம= என்ற ஓசைகள். துங்கத் திசை = உயர்ந்த திசைகளும். மலை உவரியும் = மலையும் கடலும். மறுக = கலங்கும்படி. சல்லரி = கைத்தாளம். பேரி = பேரி என்னும் வாத்தியங்கள்.

துன்ற = நெருங்கி ஒலிக்க. சிலை மணி = முழங்கும் மணி. கலகல கலின் என = கலகலவென்று. சிந்த = சப்திக்க. சுரர் மலர = தேவர்கள் பூமலர் சிந்த (மலர்சிந்த என்னும் பொருளில் ‘மலர’ என்பது வினைச்சொல்லாகப் பயின்றுள்ளது). அயன் = பிரமன். மறை புகழ் தர = வேதத்தைச் சொல்லிப் புகழ. துன்புற்ற அவுணர்கள் = துன்பம் அடைந்த அசுரர்கள். நமன் உலகு உற = யமனது உலகை அடைய. விடும் = செலுத்திய. அயில் வேலா = கூரிய வேலாயுதனே.

திசைகளும் மலைகளும் கடலும் கலங்கும்படி மிகுந்த ஓசையோடு முழங்கும் கைத்தாளமும் பேரிகையும் ஒலிக்க, உன் வில்லில் பொருந்தியுள்ள மணிகள் கலகலகலவென முழங்க, தேவர்கள் மலர் சிந்த, பிரமன் வேதங்களைச் சொன்னபடி உன் புகழைப் பாட,

துன்பம் அடைந்த அசுரர்களை யமனுலகில் செலுத்துமாறு செலுத்திய கூரான வேலாயுதத்தை உடையவனே!

கந்தச் சடைமுடி = (கந்தம்=வாசம்) மணம் பொருந்திய சடை முடி. கனல் வடிவு = நெருப்பு போன்ற திருவுருவத்தையும். அடல் அணி = வெற்றியையும் கொண்ட. எந்தைக்கு = என் தந்தையாகிய சிவபெருமானுக்கு. உயிர் எனும் = உயிர் போன்ற. மலை மகள் = மலைமகள். மரகத - பச்சை நிறத்தி. கந்தப் பரிமள = சந்தனமாதிய நறுமணத்த. தன கிரி = கொங்கை மலைகளை உடையவள் (ஆகிய) . உமை அருள் இளையோனே = உமா தேவி பெற்றருளிய இளையோனே.

மணம் வீசும் சடாமுடியும், நெருப்பைப் போன்ற வடிவமும் வெற்றியையும் உடையவனான எந்தை பரமசிவனுக்கு உயிராக விளங்கும் பச்சை நிறத்தவளும், சந்தனக் குழம்பணிந்த மார்பகத்தையுடையவளுமான உமாதேவி பெற்ற இளைய மகனே!

கஞ்சப் பதம் இவர் = தாமரை என்னும் பீடத்தில் ஏறி அமர்ந்துள்ளவரான. திருமகள் = இலக்குமி. குல மகள் = குலமகள். அம் பொற் கொடி இடை = அழகிய கொடி போன்ற இடையை உடையவள். புணர் அரி = மணந்துள்ள திருமாலின். மருக = மருமகனே. நல் கந்தப் பொழில் திகழும் = நல்ல மணம் வீசும் சோலைகள் விளங்கும். குரு மலை மருவிய பெருமாளே = சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

தாமரைப் பீடத்திலே ஏறி அமர்ந்திருக்கும் திருமகளாகிய குலமகள் மணந்துள்ள திருமாலுடைய மருமகனே! மணம் வீசும் சோலைகள் விளங்கும் (குருமலை என்ற பெயரையும் உடைய) சுவாமிமலையில் வீற்றிருப்பவனே!

எல்லோரும் காணும்படி இந்தத் திருச்சபையில் எழுந்தருள்.

பாடலின் பலன் : முருகனை தரிசிப்பது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை