எந்தத் தலத்தையும் சாராத பொதுப்பாடல்கள் வரிசையில் வரும் இன்றைய பாடலைத் தேர்ந்தெடுத்ததும் முதலில் ஒரு உண்மையை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.
ஒரு பாடலை அல்லது செய்யுளை மனப்பாடம் செய்யவேண்டுமானால், முதல்படியாக எப்போதும் அதன் பொருளை அறிந்துகொள்வது, அதன் எதுகை அமைப்பை மனத்தில் வாங்கிக்கொள்வது போன்றவற்றை மேற்கொண்டு அந்தப் பாடலை மனனம் செய்யத் தொடங்கினால் அது எளிதாக மனத்தில் படியும், பதியும்.
ஆனால், திருப்புகழிடத்திலே இந்த அணுகுமுறை செல்லுபடியாகாது. அனுபவத்தில் சொல்கிறேன். ஒரு திருப்புகழ்ப் பாவை கற்பதற்கும் மனனம் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், பாடலைப் படிப்பதும், பொருளை அறிவதும் அந்தப் பாடலோடு பழகுவதற்குப் போதுமானது. அதே பாடலை மனனமாக வசப்படுத்த வேண்டுமானால், திருப்புகழுக்கு மட்டும் பொருளை அறிவது முதற்படியன்று. அதன் வண்ணக்குழிப்பை முதலில் மனத்தில் வாங்கிக்கொள்ள வேண்டும். பிறகு காதில் எப்படி விழுகிறதோ அப்படியே உச்சரித்த வண்ணம் அவரவருக்கு எவ்வளவு முறை தேவைப்படுகிறதோ அவ்வளவு முறை — சிலருக்கு மூன்று நான்கு முறை போதும், சிலருக்கு சற்று அதிகமாகத் தேவைப்படும் — காதால் கேட்டுக் கொண்டும் எழுத்து வடிவத்தைப் பார்த்துக்கொண்டும் காதில் விழும் ஒலிப்புமுறைப்படி திரும்பத் திரும்பச் சொல்வதே திருப்புகழுக்கு செல்லுபடியாகும். பொருளைப் படித்துத் தெரிந்துகொண்டாலும், சொல்லும்போது பொருளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், ஒலிப்பு முறையை மனத்தில் இருத்தியபடிச் சொல்வதே மனனத்தைச் சுலபமாக்கும். இதைத்தான் பாராயண முறை என்கிறோம். திருப்புகழ் அன்பர்களில் ஏறத்தாழ 90-95 சதத்தினர் இப்படிப் பாராயணமாக ஓதுபவர்களே. பாராயணம் செய்தவர்கள், அவ்வாறு செய்ததன்பின் பொருளை அறிய முற்படலாம். மற்றவர்கள், பொருளை இப்போதேகூட படித்து அறியலாம். ஆனால், பாராயணமாக மனத்துள் இருத்த முயலும்போது, பொருளைத் தேடாமல் ஒலியை மட்டும் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
திருப்புகழின் பொருளமைப்பு அவ்வளவு சிக்கலானது. அதனால் சொல்கிறேன். மனனம் செய்யும் சமயத்தில் பொருளைத் தேடிக்கொண்டிருந்தால் பொருள் மயக்கம்தான் உண்டாகும். இதற்கு உதாரணமாக இன்றைய பாடலைப் பார்ப்போம். இனிமையான மெல்லோசைகளைக் கொண்ட எளிமையான பாடல்.
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
தந்தனந் தந்தனந் தனதான
அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்
சன்பிலன் துன்பவன் புகழ்வாரா
அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந்
தங்குமிங் குந்திரிந் திரைதேடுஞ்
சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ்
சஞ்சலன் கிஞ்சுகந் தருவாயார்
தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின்
தண்டையம் பங்கயம் புகழ்வேனோ
கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங்
கங்களுங் திங்களுங் கழுநீருங்
கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங்
கந்தமுந் துன்றுசெஞ் சடையாளர்
பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும்
பந்தவெங் குண்டர்தங் குலகாலா
பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும்
பண்புநண் பும்பெறும் பெருமாளே
ஆனால் பொருளைத் தேடிப் பார்த்தால், நாம் நினைக்கும் பொருள் ஒன்றாகவும், அதில் அமைந்துள்ள பொருள் வேறாகவும் இருக்கும். இது மனனம் செய்யும்போது மயக்கத்தை ஏற்படுத்தும். எனவே முதலில் ஒலிப்பு முறையை மனத்தில் வாங்குவது மனனத்துக்கு முக்கியம். பொருளை இப்போதும் அறிந்துகொள்ளலாம், பிறகும் அறிந்துகொள்ளலாம். மனனப் பயிற்சியின்போது ஒலி மட்டுமே மனத்தில் சுழல வேண்டும். நாளைக்கு இந்தப் பாடலின் பொருளைப் பார்க்கும்போது நான் சொல்வது இன்னதென்று விளங்கும்.
</p><p align="JUSTIFY"> </p><p align="center"><iframe src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/227490310&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" style="width: 377px; height: 287px" /></p><p align="JUSTIFY"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

