ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 330

எந்தவிதமான கோரிக்கையும் இல்லாமல் முழுக்க முழுக்க இறைவனுடைய துதியாகவே அமைந்த இந்தப் பாடல் திருவருணைத் தலத்துக்கானது. 

Updated On :11 ஆகஸ்ட் 2016, 6:30 pm

எந்தவிதமான கோரிக்கையும் இல்லாமல் முழுக்க முழுக்க இறைவனுடைய துதியாகவே அமைந்த இந்தப் பாடல் திருவருணைத் தலத்துக்கானது.  அடிக்கு ஒற்றொழித்து இருபத்தெட்டு எழுத்துகள்; இருபத்தேழாவது எழுத்து மட்டும் நெடில்; மற்ற அனைத்தும் குறில்.  (இருபத்தாறில் பயிலும் நெடில் விலக்கு.)  ஒவ்வொரு ஐந்தாம் எழுத்தம் வல்லொற்று.  மெல்லொற்றே கிடையாது.  தாளத்தை பாதிக்காத இடையின ஒற்றுகளில் ரகர, யகர, லகர ஒற்றுகள் மட்டுமே (ர், ய், ல்) ஆங்காங்கே பயில்கின்றன.
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
            தனதனத் தனதனத்                                    தனதான

கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்
                  கஜமுகத் தவுணனைக்                        கடியானை
            கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்
                  கனிவயிற் றினிலடக்                           கியவேழம்
அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்
                  தமர்புரிக் கணபதிக்                               கிளையோனே
            அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்
                  றியைமிகுத் தறுமுகக்                         குமரேசா
நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்
                  கையில்பிடித் தெதிர்நடத்                   திடுமீசன்
            நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்
                  கரியுரித் தணிபவற்                              கொருசேயே
துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்
                  துரியமெய்த் தரளமொய்த்                  திடவீறிச்
            சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
                  சுடரயிற் சரவணப்                                பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.