‘அடியவர் வேறு, பரம்பொருள் வேறு’ என்றிருக்கும் நிலையை மாற்றி இருவரும் ஒருவராகக் கலந்திருக்கும் ஐக்கிய நிலையைக் கோரும் பாடல் இது. சுவாமிமலைத் திருப்புகழ். அடிக்கு ஒற்றொழித்து இருபத்தைந்து எழுத்துகள்; 1, 2, 4//8, 9, 11//15, 16, 18 ஆகியவை நெடில். மற்ற அனைத்தும் குறில். ஒற்றைச் சேர்த்து 7, 14, 21 ஆகிய எழுத்துகள் வல்லொற்று. இடையினத்தில் ரகர ஒற்று மட்டும் (ர்) அவ்வப்போது பயில்கிறது. மெல்லின ஒற்று இல்லாத தாளக்கட்டு. ‘நாலாறு நாலு’ ‘நாலாரும் ஆகமம்’ ‘ஷடாதரம்’ என்று ஏகப்பட்ட கணக்குகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. விவரங்களைப் பொருளைப் பார்க்கும்போது காண்போம்.
தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த தனதான
நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்று வகையான
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த நெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு னருள்கூர
நீடார் ஷடாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொ லருள்வாயே
சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்த குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்தி மணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின் முருகோனே
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்ற பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
10 கோடி பார்வைகளைக் கடந்த முட்ட கலக்கி!

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

