மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 426

இன்றைய பாடல் திருச்செந்தூர்த் தலத்துக்கானது.

Updated On :3 டிசம்பர் 2016, 9:53 am

இறைவனை மயில்மீது அமர்ந்த கோலத்தில் எழுந்தருள வேண்டும்—‘ஏழை அடிமைக்காக வஜ்ரமயில் மீதில் இனி எப்போது வருவாயே’—என்று கோரும் இன்றைய பாடல் திருச்செந்தூர்த் தலத்துக்கானது.  ‘வேலை நகர்’ என்ற பெயரால் திருச்செந்தூரைக் குறிக்கின்றார்.  வேலை என்றால் கடல்.  கடல் சூழ்ந்த நகரான திருச்செந்தூர் என்பது பொருள்.  ‘முத்தமிழை ஆயும் வரிசைக்கார’ என்று இறைவனை விளிக்கிறார்.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகள்; ஒவ்வொரு மடக்கிலும் முதல் சீர், மூன்றாம் சீர்களில் இரண்டாமெழுத்து வல்லொற்று; இரண்டாம் சீரின் முதலெழுத்தும், மூன்றாம் சீரின் இரண்டாமெழுத்தும் (ஒற்றொழித்து) நெடில்.  பாடலைப் பார்ப்போம்.

தத்ததன தானதன தத்தான
      தத்ததன தானதன தத்தான
      தத்ததன தானதன தத்தான    -        தனதான

சத்தமிகு மேழுகட லைத்தேனை
        யுற்றமது தோடுகணை யைப்போர்கொள்
         சத்திதனை மாவின்வடு வைக்காவி  -  தனைமீறு
      தக்கமணம் வீசுகம லப்பூவை
         மிக்கவிளை வானகடு வைச்சீறு
         தத்துகளும் வாளையடு மைப்பாவு -   விழிமாதர்
மத்தகிரி போலுமொளிர் வித்தார
         முத்துவட மேவுமெழில் மிக்கான
         வச்சிரகி ரீடநிகர் செப்பான     -      தனமீதே
      வைத்தகொடி தானமயல் விட்டான
         பத்திசெய ஏழையடி மைக்காக
         வஜ்ரமயில் மீதிலினி யெப்போது  -   வருவாயே
சித்ரவடி வேல்பனிரு கைக்கார
         பத்திபுரி வோர்கள்பனு வற்கார
         திக்கினுந டாவுபுர விக்கார     -      குறமாது
      சித்தஅநு ராககல விக்கார
        துட்டஅசு ரேசர்கல கக்கார
         சிட்டர்பரி பாலலளி தக்கார    -      அடியார்கள்
முத்திபெற வேசொல்வச னக்கார
         தத்தைநிகர் தூயவநி தைக்கார
         முச்சகர்ப ராவுசர ணக்கார       -     இனிதான
      முத்தமிழை யாயும்வரி சைக்கார
         பச்சைமுகில் தாவுபரி சைக்கார
         முத்துலவு வேலைநகர் முத்தேவர்  -  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.