‘அடியேனை அடிமை கொண்டு ஆள வரவேண்டும்’ என்று கோரும் இந்தப் பாடல் பழநித் திருத்தலத்துக்கானது. பிறவியே வேண்டாம்; இருந்தாலும் பிறவி எடுக்கத்தான் வேண்டுமென்றால் ‘இன்னின்ன குறைகள் இல்லாமல் பிறந்து, அந்தப் பிறவியிலேனும் அடியேனுக்கு நற்குடிப் பிறப்பும் அறிவும் நீதி ஒழுக்கமும் அமைந்து என்னை அடிமை கொள்வதற்காக வந்தருள வேண்டும்’ என்று கேட்கிறார்.
அமைப்பு முறையில் அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகள்; தொங்கல் சீரை ஒழித்து மற்ற அத்தனைச் சீர்களிலும் குற்றெழுத்துகளால் அமைந்த பாடல்.
தனன தனன தனன தனன
தனன தனன தனதான
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் - விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு - மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் - வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் - வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள - மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை - விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் - மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

