மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 434

இந்தத் திருச்செந்தூர்த் திருப்புகழில் கோருகிறார்

Updated On :10 டிசம்பர் 2016, 12:30 pm

வாழ்வின் நெடுகிலும் திருப்புகழ் தவறாமல் நின்று துணைபுரிவதை அன்பர்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள்.  ‘உன்னுடைய சொல்லாகிய இந்தத் திருப்புகழ் என்றும் கோடாது; நேர்நின்று துணைபுரியும்’ என்று உலகோர் தாம் உணர்ந்து சொல்லுமாறு அருள வேண்டும் என்று இந்தத் திருச்செந்தூர்த் திருப்புகழில் கோருகிறார்.  இந்த வாக்கு இறைவனின் வாக்கு என்பதை இந்தப் பாடல் அழுத்தமாகச் சொல்கிறது.

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகள்; ஒன்று, மூன்று, ஐந்தாம் சீர்களில் ஒற்று நீக்கி இரண்டிரண்டு எழுத்துகள், இரண்டும் நெடில்; இரண்டு, நான்கு ஆறாம் சீர்களில் ஒரு மெல்லொற்றும் ஒரு வல்லொற்றும் பயில்கிறது.

தானா தந்தத் தானா தந்தத்
      தானா தந்தத்                       தனதான

ஓரா தொன்றைப் பாரா தந்தத்
         தோடே வந்திட்        -      டுயிர்சோர
      ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
         டாமால் தந்திட்      -        டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
         கோயா நின்றுட்      -        குலையாதே
      கோடார் செம்பொற் றோளா நின்சொற்
         கோடா தென்கைக்    -         கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
         றோளா குன்றைத்      -        தொளையாடீ
      சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
         சூர்மா அஞ்சப்       -         பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
         சேவே றெந்தைக்     -         கினியொனே
      தேனே யன்பர்க் கேயா மின்சொற்
          சேயே செந்திற்      -         பெருமாளே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.