பொய்மை மயக்கங்களிலிருந்து விடுவிக்கக் கோரும் இந்தப் பாடல், நாமக்கல்லுக்கு அருகிலுள்ள கொல்லிமலைத் தலத்துக்கானது.
அமைப்பு முறையில் அடிக்கு 22 எழுத்துகள் உள்ள பாடல். ஒவ்வொரு சீரிலும் ‘நேர்நேர்’ என்ற வாய்பாடு பயின்றாலும், ஒவ்வொரு சீரும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. 1, 4, 7 ஆகிய சீர்களின் இரண்டாமெழுத்து வல்லின மெய்; 2, 5, 8 ஆகிய சீர்களின் இரண்டாமெழுத்து மெல்லின மெய்; 3, 6, 9 ஆகிய சீர்களின் இரண்டாமெழுத்து இடையின மெய் என்று மூன்று வகையான மெய்யெழுத்துகளும் சீரான இடைவெளியில் பயில்வதைக் காணலாம். இதற்குமேல், ஒவ்வோரடியிலும் முதல் சீரும் மூன்றாம் சீரும் எதுகையாக அமைந்து internal rhyming என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் உத்தியும் பயன்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
தத்த தன்ன தைய தத்த தன்ன தைய
தத்த தன்ன தைய தனதான
கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
கட்கு மன்னு மில்ல மிதுபேணி
கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு
கக்க எண்ணி முல்லை நகைமாதர்
இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி
யிட்டு பொன்னை யில்லை யெனஏகி
எத்து பொய்ம்மை யுள்ள லுற்ற மின்மை யுள்ளி
யெற்று மிங்ங னைவ தியல்போதான்
முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
முட்ட நன்மை விள்ள வருவோனே
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
முத்தி விண்ண வல்லி மணவாளா
பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
பட்ட துன்னு கொல்லி மலைநாடா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

