திருப்புகழைப் பாட அருள்புரிய வேண்டும் என்று இறைவனைக் கேட்கும் இந்தப் பாடல் திருத்தணித் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகள் கொண்ட பாடல். இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து பன்னிரண்டு ஆகிய சீர்களில் மூன்றாமெழுத்து வல்லொற்றாக அமைந்திருக்கிறது. தொங்கல் சீரை ஒழித்து மற்ற அனைத்துச் சீர்களிலும் குறில் பயில்கிறது. நெட்டெழுத்து கிடையாது.
தனன தனத்தன தனன தனத்தன
தனன தனத்தன தனன தனத்தன
தனன தனத்தன தனன தனத்தன தனதான
குருவி யெனப்பல கழுகு நரித்திரள்
அரிய வனத்திடை மிருக மெனப்புழு
குறவை யெனக்கரி மரமு மெனத்திரி யுறவாகா
குமரி கலித்துறை முழுகி மனத்துயர்
கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி
குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் நகையாமல்
மருவு புயத்திடை பணிக ளணப்பல
கரிப ரிசுற்றிட கலைகள் தரித்தொரு
மதன சரக்கென கனக பலக்குட னதுதேடேன்
வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்
அமையு மெனக்கிட முனது பதச்சரண்
மருவு திருப்புக ழருள எனக்கினி யருள்வாயே
விருது தனத்தன தனன தனத்தன
விதமி திமித்திமி திமித திமித்திமி
விகர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு வெகுதாளம்
வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை
நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட
மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட விடும்வேலா
அரிய திரிப்புர மெரிய விழித்தவன்
அயனை முடித்தலை யரியு மழுக்கையன்
அகில மனைத்தையு முயிரு மளித்தவ னருள்சேயே
அமண ருடற்கெட வசியி லழுத்திவி
ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ
டழகு திருத்தணி மலையில் நடித்தருள் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

