திருவாவினன்குடித் திருப்புகழ் இது. ‘பழைய பழநி’ என்று இத்தலத்தை அழைக்கக் காண்கிறோம். திருவண்ணாமலைத் தலத்தின் கிரிவலப் பாதையில் சுமார் 7 கிலோமீட்டர் தள்ளி அமைந்திருக்கும் தலத்தை தற்காலத்தில் ‘அடி அண்ணாமலை’ என்று அழைத்துவருகிறார்கள். குருநாதர் இயற்றிய ‘ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்றே’ பாடல் இத்தலத்தில் இயற்றப்பட்டது. ‘ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே’ என்று அவர் பாடுகின்ற காரணத்தால், இத்தலத்தின் சரியான பெயர் ஆதி அருணாசலம் என்றும் ஆங்கிலத்தில் Adi Annamalai என்று எழுதப்போய் அதை அடி அண்ணாமலையாக்கிவிட்டோம் என்றும் புரிந்துகொள்கிறோம். பழைய பழனி என்ற குறிப்பும் அது போன்ற ஒன்றாக இருக்கலாம். பாடலைப் பார்ப்போம்.
தனன தனன தனன தனன
தனன தனன - தனதான
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய - திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி - யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி - யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் - தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு - முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழனி - யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரியை கிரியை - யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய - பெருமாளே.
</p><p> </p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/247992030&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

