பதச் சேதம் | சொற் பொருள் |
| கார் அணிந்த வரை பார் அடர்ந்து வினை காதல் நெஞ்சு அயர தடுமாறி | கார்: மேகம்; வரை: மலை; பார் அடர்ந்து: பூமியைச் சேர்ந்து, பிறந்து; வினைகாதல்: வினைகளைப் பெருக்கும் காதல் உணர்வு; நெஞ்சு அயர: நெஞ்சம் சோர்வுற; |
| கால் நரம்பு உதிர தோல் வழும்பு உறு பொய் காயம் ஒன்று பொறுத்து அடியேனும் | கால்: காற்று; உதிரம்: குருதி; வழும்பு: (மெலித்தல் விகாரம்—வழுப்பு): கொழுப்பு; காயம்: உடல்; |
| தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழி சாபம் ஒன்று நுதல் கொடியார் தம் | தார் இணங்கு குழல்: உச்சி மாலையோடு சேர்ந்திருக்கும் கூந்தல்; கூர் அணிந்த விழி: அம்பை ஒத்த விழி; சாபம்: வில்; நுதல்: நெற்றி; கொடியார்: கொடி போன்றவர்கள்; |
| தாள் பணிந்து அவர் பொன் தோள் விரும்பி மிக தாழ்வு அடைந்து உலைய தகுமோ தான் | உலைய: உலைவு அடைய, அழிந்து போக; |
| சூரன் அங்கம் விழ தேவர் நின்று தொழ தோயமும் சுவற பொரும் வேலா | அங்கம்: உடல்; தோயம்: கடல்; சுவற: வற்றிப் போக; பொரும்: போரிடும்; |
| தூய்மை கொண்ட குற தோகை நின்ற புனம் சூழ் பெரும் கிரியில் திரிவோனே | குறத் தோகை: வள்ளியம்மை; புனம்: வயல்—தினைப்புனம்; கிரி: மலை; |
| ஆரணன் கருட கேதனன் தொழ முற்று ஆலம் உண்டவருக்கு உரியோனே | ஆரணன்: ஆரண்யம் எனப்படுவதான வேதத்துக்கு மூலனான பிரமன்; கருட கேதனன்: கருடக் கொடியை உடைய திருமால்; முற்று ஆலம் உண்டவர்: ஆலகால விஷத்தை முற்றிலும் குடித்தவரான பரமேஸ்வரன்; |
| ஆலையும் பழன சோலையும் புடை சுற்று ஆவினன்குடி பெருமாளே. | ஆலை: (கரும்பு) ஆலை; பழனம்: வயல்; புடைசுற்று: பக்கங்களிலெல்லாம் சுற்றியுள்ள; |

கார் அணிந்த வரைப் பார் அடர்ந்து ... மேகங்களை உச்சியில் சூட்டிக் கொண்டுள்ள மலைகள் விளங்குவதான இந்த பூமியிலே வந்து பிறந்து,

வினைக் காதல் நெஞ்சு அயரத் தடுமாறி ... வினைகளைப் பெருக்குவதான காதல் என்னும் உணர்வு பெருகுவதால் உள்ளம் சோர்ந்து, தடுமாற்றமடைந்து;

கால் நரம்பு உதிரத் தோல் வழும்பு உறு பொய்க் காயம் ஒன்று பொறுத்து அடியேனும் ... காற்று, நரம்பு, குருதி, தோல், கொழுப்பு இவற்றால் உருவான பொய்யான—நிலையற்ற—உடலைத் தாங்கியபடி அடியேனாகிய நான்,

தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழிச் சாபம் ஒன்று நுதல் கொடியார் தம் ... மாலையோடு சேர்ந்துள்ள கூந்தலையும்; அம்பு போன்ற கூர்மையான விழிகளையும்; வில்லுக்கு ஒப்பான நெற்றியையும் உடைய; கொடிபோன்றவர்களான பெண்களுடைய—

தாள் பணிந்து அவர் பொன் தோள் விரும்பி மிகத் தாழ்வு அடைந்து உலையத் தகுமோ தான் ... (மனத்தைக் கவர்வதற்காக அவர்களுடைய) பாதங்களில் விழுந்து பணிந்தும்; அவர்களுடைய அழகிய தோள்களின்மேல் ஆசை கொண்டும், மிகவும் கீழான நிலைமையை அடைந்து அழிந்து போவது தக்கதுதானா?

சூரன் அங்கம் விழத் தேவர் நின்று தொழத் தோயமும் சுவறப் பொரும் வேலா ... சூரனுடைய உடல் விழுந்து அழியும்படியும்; தேவர்கள் நின்று போற்றும்படியும்; கடலையும் வற்றச் செய்து போர் புரிகின்ற வேலை ஏந்தியவனே!

தூய்மை கொண்ட குறத் தோகை நின்ற புனம் சூழ் பெரும் கிரியில் திரிவோனே ... பரிசுத்தமானவளும், குறவர் குலத்தின் மயில் போன்றவளுமான வள்ளியம்ம (கிளியை ஓட்டியபடி) நின்ற தினைப்புனங்கள் சூழ்ந்த வள்ளிமலையில் திரிபவனே!

(அம்மையை நாடி ‘எயினர் இடும் இதண் அதனில் இலகுதினை கிளிகடிய இனிதுபயில் சிறுமி வளர் புனமீது உலாவுவதும்’ முருகனுடைய சீர்பாதமே என்று சீர்பாத வகுப்பில் பாடுவார். வேடர்கள் அமைத்துள்ள பரண்மேல் கிளிகளை ஓட்டுவதற்காக இருக்கின்ற குறச்சிறுமி உள்ள தினைப்புனத்தில் உலாவும் பாதம் என்று பொருள்)

ஆரணன் கருடக் கேதனன் தொழ முற்று ஆலம் உண்டவருக்கு உரியோனே ... (ஆரண்யங்களின் மூலனான) பிரமனும்; கருடக் கொடியை உடையவரான திருமாலும் தொழும்படியான; ஆலகால விஷத்தை முற்றிலும் பருகியவரான பரமேஸ்வரனுக்கும் உரியவனே!

ஆலையும் பழனச் சோலையும் புடை சுற்று ஆவினன்குடியிற் பெருமாளே. ... கரும்பு ஆலைகளும், வயல்களும் சோலைகளும் எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்திருக்கும் திருவாவினன் குடியில் வீற்றுள்ள பெருமாளே!

சுருக்க உரை

சூரனுடைய உடல் அழியும்படியும்; கடல் வற்றிப் போகும்படியும் வேலை வீசிப் போர்புரிந்தவனே! பரிசுத்தமானவளும் வேடர்குல மயிலுமான வள்ளியம்மை திரிந்த தினைப்புனங்கள் நிறைந்ததான வள்ளிமலையில் (அம்மையை நாடித்) திரிந்தவனே! பிரமனும் திருமாலும் தொழும்படியானவரும் ஆலகால விஷத்தை முற்றப் பருகியவரமான பரமேஸ்வரருக்கு உரியவனே! கரும்பு ஆலைகளும் வயல்களும் சோலைகளும் எல்லாப் பக்கங்களிலும் நிறைந்து சூழ்ந்திருப்பதான திருவாவினன்குடியில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே!

மேகங்கள் சூழ்ந்த மலைகளால் நிரம்பிய இந்த பூமியின்மேல் வந்து வந்து பிறப்பெடுத்து; வினைகளைப் பெருக்கும் காதல் உணர்வு மிகுந்து, உள்ளம் சோர்ந்து தடுமாறி; காற்று, குருதி, நரம்பு, கொழுப்பு இவற்றால் ஆன பொய்யான உடலைச் சுமந்துகொண்டு அடியேன்; தலைமாலையைச் சூடிய கூந்தலும், வில்லை ஒத்த நெற்றியையும் உடைய பெண்களைக் கவர்வதற்காக அவர்களுடைய பாதத்தில் பணிந்தும்; அவர்களுடைய அழகிய தோள்களின் மேல் ஆசை கொண்டும் கீழ்மையான நிலையை அடைந்து அழிந்து போவது தக்கதுதானா? (இப்படி வீணான ஆசைகளில் என் காலம் அழிந்து போகாமல் காத்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை