பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

பகுதி - 295

கடல்போலப் பரந்த கண்களை வலையாக வீசுகிறவர்களும்; வஞ்சக எண்ணமுடையவர்களும்; மகாபாவிகளும்; தம்முடைய தந்திரங்களாலே,

Updated On :6 ஜூலை 2016, 9:42 am

பதச் சேதம்

சொற் பொருள்

அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே

அபகடம்: வஞ்சகம்; மகபாவிகள்: மகா பாவிகள் (குறுக்கல் விகாரம்; விரகு: தந்திரம், உபாயம்;

அதி வித மதரா அதம் அநீத மொழி பல கூறிகள் அசடரொடு உறவாடிகள் அநியாய

மதரா: மதர்த்து, செருக்கோடு; அதம்: தாழ்வான; அநீத மொழி: நீதியற்ற, அநியாயமான சொற்கள்;

கலை பகர் விலை மாதர்கள் இளைஞர்கள் குடி கேடிகள் கருதிடு கொடியாருடன் இனிதாக

கலை: உடலை; குடிகேடிகள்: குடியைக் கெடுப்பவர்கள்; கொடியார்: கொடியவர்கள் (அ) கொடி போன்ற பெண்கள்;

கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே

கனதனம்: பாரமான செல்வ(மான); நிருமூடன்: நிர்மூடன், முழு மூடன்;

அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குரு நாதா

அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடிவேல் விடும் அதி சூரா

அதிரிடும் வடிவேல்: அதிர்வலைகளை—ஒலியை—எழுப்பும் வடிவேல்;

தலை அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண(ம்) நினைவாகா

தலையயன்: தலையை அயன் என்று பிரித்தால், சிவனாருடைய தலையை அறிய மாட்டாத பிரமன்; தலைஅயன் என்று பிரித்தால், முதல்வனான பிரமன்; அடியார் கணம்: அடியவர்களுடைய கூட்டம்; நினை வாகா: நினைக்கின்ற அழகனே (வாகா: அழகா);

சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய தட மயில் ஏறிய பெருமாளே.

அறுபதி: ஆறு படைவீடுகளிலும்; தடமயில்: பெரிய மயில்;

அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக(கா) பாவிகள் ... அலைவீசும் கடலுக்கு ஒப்பான பரந்த விழிகளைக் கொண்டு ஆட்களுக்கு வலைவீசுபவர்களும்; வஞ்சகம் நிறைந்த மகா பாவிகளும்; (கடலில் வலையை வீசுவார்கள்.  இங்கே இவர்கள் கடலையே வலையாக வீசுகிறார்கள் என்ற நயம் உணரத்தக்கது)

விரகாலே அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் ... தம்முடைய தந்திரத்தோடும், செருக்கு நிறைந்து பலவிதமான தாழ்வானதும் அநியாயமானதுமான பேச்சுக்களைப் பேசுபவர்களும்;

அசடரொடு உறவாடிகள் அநியாயக் கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடி கேடிகள் ... அசட்டு மனிதர்களோடு உறவு கொண்டு திரிபவர்களும்; அநியாயமான முறையில் உடலை விற்கும் விலைமாதர்களும்; இளைஞர்களுடைய குடியைக் கெடுப்பவர்களுமான

கருதிடு கொடியாருடன் இனிதாகக் கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை ... (என்னுடைய மனத்திலே) நினைத்திருக்கும் கொடிபோன்ற பெண்களுடைய கனமான மார்பகங்களின் மீது விழுகின்ற வஞ்சகனும் முழுமூடனுமான எனக்கு,

கழல் இணை பெறவே இனி அருள்வாயே ... உன்னுடைய இரண்டு திருவடிகளையும் அடையுமாறு இனிமேல் அருளவேண்டும்.

அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குரு நாதா ... அலை வீசுகின்ற கங்கையைத் தலையில் தரித்துள்ளவரும்; (பசுக்களுக்கெல்லாம் பதி) உயிர்களுக்கெல்லாம் பதியானவருமான சிவபிரானுடைய மகனே, ஆறுமுகங்களோடு காட்சிதரும் உருவத்தனே!  அருள் பாலிக்கின்ற குருநாதனே!

அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடிவேல் விடும் அதி சூரா ... அசுரர்களுடைய குடியானது அழியும்படியும், தேவர்கள் தங்களுடைய அமராபதியைத் திரும்பப் பெறும்படியும் முழக்கமிடுவதான வடிவேலை எறிந்த அதி சூரனே!

தலை அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண(ம்) நினை வாகா ... சிறந்த பிரமனாலும் அறியப்பட மாட்டாத ஒப்பற்ற சிவனாருடைய குருபரனே என்று பூமியில் அடியார் கூட்டம் நினைத்து(த் துதிக்கும்) அழகனே!

சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய தட மயில் தனில் ஏறிய பெருமாளே. ... எல்லா தலங்களுக்கும் முதன்மை பெற்று விளங்கும் ஆறு திருப்பதிகளில்* வீற்றிருப்பவனே!  பெரிய மயில்மீது ஏறிவருகின்ற பெருமாளே!

* திருமுருகாற்றுப் படையின்படி ஆறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகியவை.

சுருக்க உரை

அலைவீசுகின்ற கங்கையை சடாமுடியில் தரித்திருக்கும் பசுபதியான சிவபிரானின் மகனே!  ஆறுமுக உருவத்தனே!  அருள் பாலிக்கும் குருபரனே!  அசுரர்களுடைய குடி அழியும்படியும் தேவர்கள் தங்களுடைய அமராபதியைத் திரும்பப் பெறும்படியும் முழக்கமிடுகின்ற கூரிய வேலைச் செலுத்தியவனே!  அதி சூரனே!  ‘சிறந்த பிரமனாலும் அறிய முடியாதவரான ஒப்பற்ற சிவபிரானுடைய குருவே’ என்று பூமியிலுள்ள அடியார்களுடைய திருக்கூட்டம் எண்ணித் துதிக்கின்ற அழகனே!  எல்லாத் தலங்களுக்கும் முதலானவையாக விளங்கும் ஆறுபடை வீடாகிய தலங்களில் எழுந்தருளியுள்ளவனே!  பெரிய மயிலேறும் பெருமாளே!

கடல்போலப் பரந்த கண்களை வலையாக வீசுகிறவர்களும்; வஞ்சக எண்ணமுடையவர்களும்; மகாபாவிகளும்; தம்முடைய தந்திரங்களாலே, செருக்கோடு பலவித அநியாயமான சொற்களைப் பேசுபவர்களும்; அசட்டு மனிதர்களோடு உறவாடுபவர்களும்; அநியாயமான முறையில் உடலை விலைபேசி விற்பவர்களுமான விலைமாதர்களோடு இனிதே கூடி, அவர்களுடைய பாரமான மார்பகங்களில் விழுகின்ற வஞ்சகனும், முழுமூடனுமான அடியே, உன்னுடைய திருவடி இணைகளை இனிமேல் பெறும்படி அருள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.