பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

பகுதி - 297

அன்பர்கள் உன்னைக் குறித்துச் செய்கின்ற தானம், தவம் ஆகியவற்றின் மேன்மையான பகுதியை

Updated On :8 ஜூலை 2016, 12:31 pm

பதச் சேதம்

சொற் பொருள்

ஈனம் மிகுத்துள பிறவி அணுகாதே

ஈனம்: இழிவு;

யானும் உனக்கு அடிமை என வகையாக

ஞான அருள் தனை அருளி வினை தீர

நாணம் அகற்றிய கருணை புரிவாயே

தான தவத்தினின் மிகுதி பெறுவோனே

மிகுதி: மேன்மையான பகுதி;

சாரதி உத்தமி துணைவ முருகோனே

சாரதி: சரஸ்வதி (அல்லது) சா-ரதி: அந்த ரதி தேவி; துணைவ: சகோதரா;

ஆன திருப்பதிகம் அருள் இளையோனே

திருப்பதிகம்: தேவாரத் திருப்பதிகங்கள்; இளையோனே: ஞானசம்பந்தராக வந்தவனே;

ஆறு திரு பதியில் வளர் பெருமாளே.

ஈனமிகுத்துள பிறவி யணுகாதே ... இழிவு நிறைந்ததான பிறவிப் பிணி என்னை இனிமேல் அணுகாதபடி;

யானுமுனக்கு அடிமையென வகையாக ... நானும் உன்னுடைய அடிமையாகின்ற படிக்கு (பேற்றைப் பெற);

ஞானஅருள் தனையருளி ... மெய்ஞ்ஞானமாகிய உனதருளை அடியேனுக்கு அருள்வித்து;

வினைதீர ... என்னுடைய வினைகள் தீர்ந்து ஒழியவும்;

நாணம் அகற்றிய கருணை புரிவாயே ... நாணம் என்னும் தளையிலிருந்து அடியேனை விடுவிக்கக் கருணை புரிந்தருள வேண்டும்.

தானதவத்தினின்மிகுதி பெறுவோனே ... (அன்பர்கள் உன்னைக் குறித்தே செய்கின்ற) தானங்கள், தவங்கள் ஆகியவற்றின் மேன்மையான பகுதியைப் பெறுகின்றவனே!

சாரதியுத்தமி துணைவ முருகோனே ... உத்தமியான சரஸ்வதியம்மையின் சகோதரனே!

ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே ... (சிவபிரானுக்கு உகப்பு) ஆன பல தேவாரத் திருப்பதிகங்களைத் திருஞான சம்பந்தராகத் தோன்றி, பாடியருளிய இளையவனே!

ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே. ... ஆறுபடை வீடுகளிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

அன்பர்கள் உன்னைக் குறித்துச் செய்கின்ற தானம், தவம் ஆகியவற்றின் மேன்மையான பகுதியை அடைபவனே!  சரஸ்வதி (அல்லது ரதி) தேவியின் சகோதரனே!  சிவபெருமானுக்கு உகப்பான தேவாரத் திருப்பதிகங்களைத் திருஞான சம்பந்தராக அவதரித்துப் பாடியருளிய இளையவனே!  அறுபடைவீடுகளிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே!

இழிவு மிகுந்ததான பிறவிப் பிணி என்னை இதற்குமேல் அணுகாத வண்ணமாக; உனது திருவருளாகிய ஞானத்தை அடியேனுக்கு அருளி, என் வினைகளைத் தீர்த்து, அடியேனுக்கு விலங்காகப் பூட்டப்பட்டுள்ள நாணம் என்னும் தளையை அறுத்து, நான் என்றென்றும் உன் அடிமையாக விளங்குவதற்கான திருவருளைப் புரிந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.