புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 304

சண்பைப்பதி என்கிற சீகாழித் தலத்துக்கான இன்றைய பாடல் அகப்பொருளாகப் பாடப்பட்ட ஒன்று.  ‘இந்தப் பெண்

Updated On :14 ஜூலை 2016, 8:46 am


சண்பைப்பதி என்கிற சீகாழித் தலத்துக்கான இன்றைய பாடல் அகப்பொருளாகப் பாடப்பட்ட ஒன்று.  ‘இந்தப் பெண் துணையின்றித் தனிமையில் இருக்கிறாள்’ என்று மட்டும் சொல்கிறது.  இப்படி அகத்துறையில் ஒரு பாடல் இயற்றப்பட்டால், அதன் உட்பொருள், ‘தனிமையில் உள்ள பெண்ணுக்கு நீ துணையாக வரவேண்டும்.  இவளைப் போலவே துணையின்றித் தனிமையில் வாடும் அடியவர்களுக்குத் துணையாக நிற்கவேண்டும்’ என்று கோருவதாய் விரித்துப் பொருள்கொள்வதே பொருந்தும்.

தந்தத்தன தானன தந்தத்                  தனதானா

சிந்துற்றெழு மாமதி அங்கித்               திரளாலே
      தென்றற்தரு வாசமி குந்துற்         றெழலாலே
அந்திப்பொழு தாகிய கங்குற்               றிரளாலே
      அன்புற்றெழு பேதைம யங்கித்       தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத்               திகழாயே
      நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப்  பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற்              கினியோனே
      சண்பைப்பதி மேவிய கந்தப்          பெருமாளே.

</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/273617842&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p><img src="https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.