இன்றைய பாடலும் சீகாழித் தலத்துக்குரியது. அடிக்கு இருபத்திரண்டு எழுத்துகளும், சந்த அமைப்பில் வல்லொற்றுகளையும் கொண்ட பாடல். அற்பமான செல்வத்தைப் பெறுவதற்காக செல்வந்தர்களைப் பொய்மொழிகளால் துதித்துப் பாடுகின்ற இவர்களுடைய முன்னிலையில் நான் வெட்கி நிற்கிறேனே, என்னைக் கண்பார்த்தருள வேண்டும் என்று வேண்டுகிறது. சீகாழிக்குக் கொச்சை என்றும் பெயரிருப்பது இப்பாடலால் தெரிகிறது.
தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்
தத்தனா தத்தனத் தனதான
செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்
தெற்கிலூ தைக்கனற் றணியாத
சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச்
சித்தம்வா டிக்கனக் கவிபாடிக்
கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்
கற்பதா ருச்செகத் த்ரயபாநு
கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க்
கைக்குணான் வெட்கிநிற் பதுபாராய்
சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித்
தப்ரதா பர்க்குமெட் டரிதாய
தத்வவே தத்தினுற் பத்திபோ தித்தஅத்
தத்வரூ பக்கிரிப் புரைசாடிக்
கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக்
குத்துரா வுத்தபொற் குமரோனே
கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக்
கொச்சைவாழ் முத்தமிழ்ப் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/273792386&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

