புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 308

என்றார் அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில்.  அம்மையும் அப்பனுமான இறைவியும் இறைவனும் நம்மை நாடி வந்து, தம் அடியார்களுடைய திருக்கூட்டத்தின் நடுவே இருக்கும்படி செய்து,

Updated On :21 ஜூலை 2016, 6:19 am

புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே

என்றார் அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில்.  அம்மையும் அப்பனுமான இறைவியும் இறைவனும் நம்மை நாடி வந்து, தம் அடியார்களுடைய திருக்கூட்டத்தின் நடுவே இருக்கும்படி செய்து, நம் சிரத்தில் தம் தாமரைப் பாதங்களைப் பதிக்கிறார்கள் என்றால் மனமே இதற்கு நாம் புண்ணியம் செய்திருக்கிறோம் அல்லவா என்பது பொருள்.  அடியார் திருக்கூட்டத்தோடு கலந்திருப்பது நாடத் தக்கனவற்றிலெல்லாம் தலையாயது.  அதைத்தான் இந்தப் பழநித் தலத்துக்கான பாடலில் குருநாதர் கேட்கிறார்.

அடிக்கு இருபத்தைந்து எழுத்துகளும் இவற்றில் 1, 8, 15, 24, 25 ஆகிய எழுத்துகள் நெடில்; மற்ற அனைத்தும் குறில்.  இடையின மெய்கள் மட்டும் பயிலும் இந்தப் பாடல் முழுவதிலும் வல்லின மெல்லின மெய்கள் இடம் பெறவில்லை.

இந்தப் பாடலில் இன்னொன்றும் குறிப்பிடத் தக்கது.  ‘மனிதரைப் பொய்யாக வாழ்த்திப் பாடாமல்’ இருக்கும் வரத்தைப் பல பாடல்களில் கேட்டுள்ள குருநாதர், தன் பாடல்களில் மனிதர்களைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளாரா என்று பார்த்தால், மூன்று பேரைக் குறிப்பிட்டுள்ளார்.  மூவரும் முருகன் அடியார்கள்.  ‘அடியார்கள் நடுவிருக்கப்’ பண்ணும்படிக் கோரும் பாடலில் இது இடம் பெறுவது பொருத்தமானதும்கூட.  பிரபுடதேவ மகராஜன் (அதல சேடனாராட); கலிசை சேவகன் (இன்றைய பாடலிலும், ‘சீயுதிரம் எங்கும்’ என்று தொடங்கும் இன்னொரு பாடலிலும்); சோமநாதர் என்னும் ஒரு அன்பர் (ஒருவழிபடாது என்ற சோமநாதன் மடப் பாடல்) ஆகியோரே குருநாதர் குறிப்பிட்டுப் பாடியுள்ள மூன்று மனிதர்கள், முருகன் அடியார்கள்.  இவர்களில் பிரபுடதேவ மகராஜனைத் தவிர மற்ற இருவரைப் பற்றி இதற்கு மேற்பட்ட விவரங்கள் இல்லை.  பாடலைப் பார்ப்போம்.

தான தனனதன தான தனனதன
      தான தனனதன                     தனதானா

சீற லசடன்வினை காரன் முறைமையிலி
         தீமை புரிகபடி                    பவநோயே
      தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
         சீர்மை சிறிதுமிலி                எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
         கோள னறிவிலியு               னடிபேணாக்
      கூள னெனினுமெனை நீயு னடியரொடு
         கூடும் வகைமையருள்           புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
         வாகை யுளமவுலி                புனைவோனே
      மாக முகுடதிர வீசு சிறைமயிலை
         வாசி யெனவுடைய              முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
         மேவு மொருபெருமை            யுடையோனே
      வீரை யுறைகுமர தீர தரபழநி
         வேல இமையவர்கள்             பெருமாளே.
 

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/274657009&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.