பதச் சேதம் | சொற் பொருள் |
சீறல் அசடன் வினைகாரன் முறைமை இலி தீமை புரி கபடி பவ நோயே
| சீறல்: சீறுபவன், கோபிப்பவன்; அசடன்: மூடன்; வினைகாரன்: தீவினையையே செய்பவன்; முறைமை இலி: முறைமை (ஒழுக்கம்) இல்லாதவன்; கபடி: கபடன், வஞ்சகன்; பவநோயே: பிறவியாகிய நோயையே; |
தேடு பரிசி கன(ம்) நீதி நெறி முறைமை சீர்மை சிறிதும் இலி எவரோடும்
| பரிசி: தன்மையை உடையவன்; கனம்: பெருமை; சீர்மை: சிறப்பு; |
கூறு மொழியது பொய்யான கொடுமை உள கோளன் அறிவு இலி உ(ன்)னடி பேணா
| கோளன்: கொண்டவன்; |
கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு கூடும் வகைமை அருள் புரிவாயே
| கூளன்: கூளத்தைப் (குப்பையைப்) போன்றவன்; |
மாறு படும் அவுணர் மாள அமர் பொருது வாகை உள மவுலி புனைவோனே
| மாறுபடும்: எதிர்க்கும்; அவுணர்: அரக்கர்; அமர் பொருது: போர் புரிந்து; வாகை: வெற்றி (வென்றவர் அணியும் வாகை மலர்); மவுலி: மகுடம்; |
மாக முகடு அதிர வீசு சிறை மயிலை வாசி என உடைய முருகோனே
| மாக முகடு: ஆகாயத்தின் உச்சி; சிறை: சிறகு; வாசி: குதிரை; |
வீறு கலிசை வரு சேவகனது இதய மேவும் ஒரு பெருமை உடையோனே
| வீறு: பெருமை (மிகுந்த); சேவகன்: வீரன்; ஒரு பெருமை: ஒப்பற்ற பெருமை (ஒரு=ஒப்பற்ற); |
வீரை உறை குமர தீரதர பழநி வேல இமையவர்கள் பெருமாளே.
| தீரதர: தீரத்தைத் தரித்தவனே, தைரியம் மிகுந்தவனே; |

சீற லசடன் ... கோபத்தால் சீறி விழுபவன்; மூடன்;

வினைகாரன் முறைமையிலி ... தீவினைகளையே செய்பவன்; ஒழுக்கமற்றவன்;

தீமை புரி கபடி ... தீயனவற்றைச் செய்பவன்; வஞ்சகன்;

பவநோயே தேடு பரிசி ... பிறவியாகிய நோயைத் தேடி அடையும் தன்மையுடையவன்;

கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி ... பெருமைக் குணங்களோ; நீதிநெறியோ; முறையான நேர்மையோ; சிறப்போ (எதுவுமே) சிறிதளவும் இல்லாதவன்;

எவரோடுங் கூறு மொழியது பொய்யான கொடுமையுள கோளன்... அனைவரிடத்திலும் பொய்பேசித் திரிகின்றவன்; கொடிய தன்மையைக் கொண்டவன்;

அறிவிலி உன்அடிபேணாக் கூளன் ...அறிவற்றவன்; உன்னுடைய திருவடிகளைப் போற்றாதவன்; குப்பை போன்றவன்;

எனினுமெனை... இப்படிப்பட்டவனாக இருந்தபோதிலும் அடியேனை,

நீயுன் அடியரொடு கூடும் வகைமையருள் புரிவாயே ... உன்னுடைய அடியார் திருக்கூட்டத்தோடு கூடியிருக்கும்படியான வழியைக் காட்டி அருள்புரிய வேண்டும்.

மாறு படுமவுணர் மாள அமர்பொருது ... எதிர்த்து வந்த அசுரர்கள் இறந்துபோகும்படிப் போர்புரிந்து,

வாகை யுளமவுலி புனைவோனே ... வெற்றிக்கு அடையாளமான வாகைமலரைச் சூட்டிய மகுடத்தை அணிந்தவனே!

மாக முகடதிர வீசி சிறைமயிலை.. ஆகாயத்தின் உச்சி அதிரும்படியாகச் சிறகுகளை வீசிப் பறக்கின்ற மயிலை,

வாசி யெனவுடைய முருகோனே ... குதிரையைப் போன்ற வாகனமாக உடைய முருகனே!

வீறு கலிசைவரு சேவகனது இதயம் ... புகழ் பெற்றதான கலிசை* என்ற தலத்தின் அரசனாக இருந்த அடியவனுடைய உள்ளத்தில்,

மேவு மொருபெருமை யுடையோனே ... வீற்றிருக்கின்ற ஒப்பற்ற பெருமையை உடையவனே!

வீரை யுறைகுமர ... வீரை** என்ற திருத்தலத்தில் உறைபவனே! குமரனே!

தீரதர பழநி வேல ... தீரத்தைத் தரித்தவனே! பழநிப் பதியில் வீற்றிருக்கும் வேலாயுதனே!

இமையவர்கள் பெருமாளே. ... தேவர்களுடைய பெருமாளே!

(* கலிசைவரு சேவகன்: அருணகிரியாருக்கு உற்ற நண்பனாகவும், கலிசை என்னும் தலத்தின் அரசனும், முருகனடியானுமான அரசன்; ** வீரை: இது திருப்பெருந்துறைக்கு அருகிலுள்ள வீரையூர் என்றும், இந்த வீரைத் தலத்தில் கலிசை மன்னன் பழநி முருகனை எழுந்தருளச் செய்தான் என்றும் தெரிகிறது.)

சுருக்க உரை

எதிர்த்து வந்த அசுரர்கள் மாண்டு போகும்படிப் போர்புரிந்து வெற்றிவாகையோடு விளங்கும் மகுடத்தைத் தரித்தவனே! ஆகாயத்தின் உச்சி அதிரும்படி சிறகுகளை வீசிப் பறக்கும் மயிலை(க் குதிரையைப் போன்ற) வாகனமாகக் கொண்டவனே! கலிசைப் பதியின் மன்னனான உன் அடியவனுடைய உள்ளத்தில் குடியிருக்கும் ஒப்பற்ற பெருமையை உடையவனே! வீரைத் தலத்தில் வீற்றிருக்கும் குமரனே! தீரனே! பழநியில் எழுந்தருளியிருப்பவனே! வேலனே! தேவர்களுடைய பெருமாளே!

அடியேன் பெருங்கோபத்தை உடையவன்; மூடன்; தீவினை புரிபவன்; ஒழுக்கமற்றவன்; தீமையே செய்யும் வஞ்சகன்; பிறவியாகிய நோயையே தேடித் தேடிப் பெறுபவன்; பெருமை, நீதி நெறி, நேர்மை, சிறப்பு ஆகிய இவை எவையும் ஒருசிறிதும் இல்லாதவன்; எல்லோரிடமும் பொய்பேசித் திரிபவன்; கொடியவன்; அறிவற்றவன்; உன் திருவடியைப் போற்றாதவன்; குப்பை-கூளத்தைப் போலப் பயனற்றவன்; நான் இவ்வாறெல்லாம் இருந்த போதிலும்,

அடியேனை உன்னுடைய அடியார் திருக்கூட்டத்தோடு கூட்டிவைப்பதற்கான வழியைக் காட்டி அருள்செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை