திருத்தணித் தலத்துக்கான இன்றைய பாடல், ‘தணிகை’ என்று ஓதும் பேற்றைக் கோருகிறது. அடிக்கு ஒற்றொழித்து இருபத்திரண்டு எழுத்துகள் உள்ள இந்தப் பாடலில் (ஒற்று சேர்த்து) ஒவ்வொரு ஏழாவது எழுத்தும் வல்லின மெய். இருபத்தோராவது எழுத்து மட்டும் நெடில், மற்ற அனைத்து எழுத்துகளும் குறில். (இப்படிச் சொல்லும் சமயங்களில் ஈற்றுச் சீரான பெருமாளே, தம்பிரானே என்று கடைசி இரண்டெழுத்துகள் நெடிலாக அமைந்திருப்பது கணக்கில் வராது. தாளக் கணக்கின்படி ஈற்றுக் குறில், நெடிலாகவே ஒலிக்கும். ‘தம்பி’ எனப்படுவது ‘தம்பீ’ என்று நீண்டு ஒலிப்பது போல. அதிகமான technical detailsஐ இப்போதைக்குத் தவிர்க்கிறேன். பின்னொரு நாள் பார்ப்போம்.)
வள்ளல்களைப் புகழவேண்டுமானால், பழைய பாடல்களில் உள்ளனவற்றை அப்படியே எடுத்துக் கொண்டு, கொஞ்சம் அங்குமிங்குமாக வார்த்தைகளை மாற்றிப் போட்டு பாடல் எழுதும் பழக்கம் என்றும் உண்டு போலும். அதைத்தான் ‘பழைய மொழியைத் திருடி, நெருடிக் கவிபாடி’ என்று கேலி பேசுகிறார். பாடலைப் பார்ப்போம்.
தனன தனனத் தனன தனனத்
தனன தனனத் தனதான
சொரியு முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச் சமமாகச்
சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
சுமட ரருகுற் றியல்வாணர்
தெரியு மருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் கவிபாடித்
திரியு மருள்விட் டுனது குவளைச்
சிகரி பகரப் பெறுவோனோ
கரிய புருவச் சிலையும் வளையக்
கடையில் விடமெத் தியநீலக்
கடிய கணைபட் டுருவ வெருவிக்
கலைகள் பலபட் டனகானிற்
குரிய குமரிக் கபய மெனநெக்
குபய சரணத் தினில்வீழா
உழையின் மகளைத் தழுவ மயலுற்
றுருகு முருகப் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/274678738&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

