இன்றைய பாடல் திருச்செந்தூருக்கானது. தொண்டு செய்யும் பேற்றைக் கோருகிறது. திருச்செந்தூர் தலத்துப் பாடல்களுக்கே பொதுவாக மெல்லின மெய்களால் அமைந்த தந்தந்தம் என்பதை ஒந்த சந்த அமைப்பு இருப்பது வழக்கம். (பிற தலங்களைப் பாடும்போதும் இது உண்டென்றாலும், இன்றைய பாடல், தண்டையணி வெண்டையம், வங்கார மார்பிலணி, அம்பொத்தவிழி தந்தக் கலக, கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவில்… போன்ற பாடல்களை நோக்கும் போது திருச்செந்தூர்ப் பதியின் மீதான பாடல்களில் இத்தகைய சந்த அமைப்பு அதிகம் பயில்வதைக் காண்கிறோம்.) அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட இந்தப் பாடலில், (ஒற்று சேர்த்து) ஒவ்வொரு 2, 4, 8, 12 ஆகிய எழுத்தும் மெல்லின மெய்யாக அமைந்திருப்பதைக் காணலாம். இந்தக் காரணத்தால் இப்பாடலில் மிருதங்க ஓசையைக் காட்டிலும் ஜலதரங்க ஓசை அதிகம் பயில்வதைக் காணலாம்.
தந்தந்தந் தந்த தனந்தன
தந்தந்தந் தந்த தனந்தன
தந்தந்தந் தந்த தனந்தன தனதனா
துன்பங்கொண் டங்க மெலிந்தற
நொந்தன்பும் பண்பு மறந்தொளி
துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி லணுகாதே
இன்பந்தந் தும்பர் தொழும்பத
கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி
யென்றென்றுந் தொண்டு செயும்படி யருள்வாயே
நின்பங்கொன் றுங்குற மின்சர
ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி
நின்றன்பின் றன்படி கும்பிடு மிளையோனே
பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
குன்றெங்குஞ் சங்கு வலம்புரி
பம்புந்தென் செந்திலில் வந்தருள் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/275571352&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்! வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

