பதச் சேதம் | சொற் பொருள் |
அத்த(ம்) வேட்கை பற்றி நோக்க தத்தைமார்க்கு தமராய்
| அத்தம்: பொருள்; தத்தைமார்: கிளிபோன்ற பெண்களுக்கு; தமர்ஆய்: வேண்டியவனாய்; |
அன்பு அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற இயஓடும்
| பராக்கு: கவனமின்மை. ‘அரசர் வருகிறார் பராக் பராக்’ என்னும்போது, கவனம், கவனம் என்று பொருள்படும். இதுவே இங்கே உள்ள பொருள்; அச்சு தோள்: வடிவாய் அமைந்த தோள்; இயஓடும்: அலைபாயும்; |
சித்தம் மீட்டு பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி திணிது ஆய
| சிக்கு: சிக்கல்; திணிது ஆய: உறுதியான; |
சித்ர வாக்கு பெற்று வாழ்த்தி செச்சை சாத்த பெறுவேனோ
| சித்ர: அழகான; வாக்கு: வாக்கு வன்மை; செச்சை: வெட்சி மாலை; |
கொத்து நூற்று பத்து நாட்ட கொற்ற வேத்துக்கு அரசாய
| கொத்து: கொத்தாக; நூற்றுப் பத்து: (100x10) ஆயிரம்; நாட்ட(ம்): விழி—ஆயிரம் விழியோன், இந்திரன்; கொற்றம்: வீரம்; வேத்து: வேந்து—வலித்தல் விகாரம்; |
குக்குட((ம்) அத்த சர்ப்ப கோத்ர பொற்ப வேல் கை குமரேசா
| குக்குட அத்த: கோழிக் கொடியைக் கையில் ஏந்திய; சர்ப்ப கோத்ர: திருச்செங்கோட்டு; பொற்ப: அழகா |
தத்வம் நாற்பத்து எட்டு நாற்பத்து எட்டும் ஏற்று திடம் மேவும்
| தத்வ நாற்பத்தெட்டு நாற்பத்தெட்டு: தொண்ணூற்றாறு தத்துவங்களை; |
தர்க்க சாத்ர தக்க மார்க்க சத்ய வாக்ய பெருமாளே.
| தர்க்க சாத்ர: தர்க்க—logic—சாஸ்திரம்; தக்க மார்க்க: தக்க வழி; சத்ய வாக்ய: சத்தியமான வாக்கை உடைய; |

அத்த(ம்) வேட்கை பற்றி நோக்கு அத் தத்தைமார்க்கு தமர் ஆய் ... பொருளின்மேல் விருப்பம் கொண்டு அதன் காரணமாய் என்னை (விரும்புவதுபோல்) பார்க்கின்ற கிளிபோன்ற பெண்களுக்கு வேண்டியவனாகி,

அன்பு அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற இயவோடும் சித்தம் ... அன்பில்லாதவர்களான அந்தக் கூட்டத்தில் என் மொத்த கவனத்தையும் செலுத்தி, வடிவான அவர்களுடைய தோள்களை அணைக்க எண்ணி அலைபாய்கின்ற இந்த மனத்தை,

மீட்டுப் பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி ... மீட்டு, அவ்வழியிலிருந்து திசைதிருப்பி, இந்தப் பொய்யான வாழ்க்கை என்னும் சிக்கலை நீக்கி விடுபட்டு,

திணிது ஆய சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச் செச்சை சாத்தப் பெறுவேனோ ... திண்மையும் அழகும் சேர்ந்த வாக்குவன்மையை அடைந்து, உன்னுடைய திருக்கரத்தால், உன் மார்பில் திகழ்வதான வெட்சிமாலையைச் சூட்டப்பெறும் பாக்கியத்தை நான் அடைவேனா?

கொத்து நூற்றுப் பத்து நாட்ட கொற்ற வேத்துக்கு அரசாய குக்குட(ம்) அத்த ... கொத்தாகத் திரண்டிருக்கும் (நூற்றுப் பத்து=100x10) ஆயிரம் கண்களை உடையவனும், வீரம் நிறைந்த தேவர்களின் அரசனுமான இந்திரனுக்கு அரசனே! கோழிக்கொடியை ஏந்தியவனே!

சர்ப்ப கோத்ரப் பொற்ப வேல் கைக் குமரேசா ... சர்ப்பகோத்ரம் என்றழைக்கப்படும் திருச்செங்கோட்டில் வீற்றுள்ள அழகனே! கையில் வேலை ஏந்தியுள்ள குமரேசனே!

தத்வம் நாற்பத்து எட்டு நாற்பத்து எட்டும் ஏற்றுத் திடம் மேவும் தர்க்க சாத்ரத் தக்க மார்க்க ... (நாற்பத்தெட்டும் நாற்பத்தெட்டும்) தொண்ணூற்றாறு தத்துவங்களிலும் பொருந்தி, திடமான தர்கக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள தகுந்த வழிகளைக் காட்டுகின்ற,

சத்ய வாக்யப் பெருமாளே. ... வாக்கில் சத்யம் நிறைந்த பெருமாளே.

சுருக்க உரை

கொத்தான ஆயிரம் கண்களை உடையவனும் வீரம் செறிந்தவனும் தேவர்களுக்கு அரசனுமான இந்திரனுக்கு அரசனே! கையில் கோழிக்கொடியை ஏந்தியவனே! சர்ப்பகோத்ரம் எனப்படும் திருச்செங்கோட்டில் குடிகொண்டிருப்பவனே! தொண்ணூற்றாறு* தத்துவங்களிலும் பொருந்தி, திடமான தர்க்க சாஸ்திரங்களில் சொல்ப்பட்டுள்ள தகுந்த வழிகளைக் காட்டுபவனே! வாக்கிலே சத்தியம் குடியிருக்கும் பெருமாளே!

பொருளின்மேல் விருப்பம் கொண்டு அதன் காரணமாக என்னை விருப்பத்துடன் நோக்குவது போலத்தோன்றும் அந்தக் கிளிபோன்ற பெண்களுக்கு வேண்டியவனாகி, அவர்கள் கூட்டத்திலேயே என்னுடைய நாட்டத்தை நிலைக்கச் செய்து, அவர்களுடைய வடிவான தோள்களை அணைப்பதற்காக அலைபாயும் என் மனத்தை அவ்வழியிலிருந்து மீட்டுத் திருப்பி, பொய்யான வாழ்க்கை என்னும் சிக்கல் நீங்கப் பெற்று, அழகும் உறுதியும் நிறைந்த வாக்கு வன்மையையும், உனது மார்பிலே அணிந்திருக்கும் வெட்சிப் பூமாலையை உனது திருக்கரங்களால் சாத்தப்படும் பாக்கியத்தை அடியேன் பெறுவேனோ. (அடியேனுக்கு அந்த பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்.)

* தொண்ணூற்றாறு தத்துவங்கள்:

அகத் தத்துவங்கள் 36 (ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5)

பூதங்கள் ஐந்து. ஒவ்வொன்றுக்கும் உள்ள தன்மைகள் ஐந்தைந்து. ஆக 25

புறத் தத்துவங்கள் 35 (வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை