புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 284

குன்றுதோறாடலில் உள்ள ஐந்து பாடல்களில் இரண்டாவது இது.  ‘சிகராத்ரி கூறிட்ட வேலுஞ் செஞ் சேவலும் செந்தமிழாலே பகர் ஆர்வம் ஈ’ என்று கேட்டதைப் போல இந்தப் பாடலிலும் ‘செந்தமி நாளும் ஓதி உய்ந்திட’ வேண்டுகிறார்.

Updated On :21 ஜூன் 2016, 10:01 am

குன்றுதோறாடலில் உள்ள ஐந்து பாடல்களில் இரண்டாவது இது.  ‘சிகராத்ரி கூறிட்ட வேலுஞ் செஞ் சேவலும் செந்தமிழாலே பகர் ஆர்வம் ஈ’ என்று கேட்டதைப் போல இந்தப் பாடலிலும் ‘செந்தமி நாளும் ஓதி உய்ந்திட’ வேண்டுகிறார்.  ‘நாலான வேத நூல்ஆகம ஆதி நான் ஓதினேனும் இலை; வீணே நாள்போய் விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே’ என்று விராலி மலைத் திருப்புகழான ‘மாலாசை கோபம் ஓயாதெனாளும் மாயாவிகார வழியேசெல்’ பாடலில் கேட்டதைப் போலவே இப்பாடலிலும் உபதேசம் அருளுமாறு கேட்கிறார்.  பாடலைப் பார்ப்போம்:

தந்தன தான தான தந்தன தான தான
      தந்தன தான தான                  தனதான

வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
         மஞ்சரி கோவை தூது            பலபாவின்
      வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
         வந்தியர் போல வீணி            லழியாதே
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
         திண்டிறல் வேல்ம யூர           முகமாறும்
      செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
         செங்கனி வாயி லோர் சொல     ருள்வாயே
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
         பஞ்சற வாது கூறு               சமண்மூகர்
      பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
         பண்டித ஞான நீறு               தருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
         குன்றவர் சாதி கூடி              வெறியாடிக்
      கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
         குன்றுதொ றாடல் மேவு         பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/270150367&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.