பதச் சேதம் | சொற் பொருள் |
ஒருபதும் இருபதும் அறுபதும் உடன் ஆறும் உணர்வு உற இரு பதம் உ(ள்)ளம் நாடி
| ஒருபதும் இருபதும் அறுபதும் உடன் ஆறும்: 10+20+60+6=96—தொண்ணூற்றாரு தத்துவங்க; உணர்வுற: உணர்ந்து; இருபதம்: இரண்டு திருவடிகளையும்; |
உருகிட முழு மதி தழல் என ஒளி திகழ் வெளியொடு ஒளி பெற விரவாதே
| முழுமதி: பூரண நிலவு; தழல்: தீ. (இந்த இடத்தில் முழுமதியின் தீ=பூரண சந்திரனின் ஜோதி); வெளி: பரவெளி; விரவாது: கலக்காமல் (கலக்க முயலாமல்); |
தெருவினில் மரம் என எவரொடும் உரை செய்து திரி தொழில் அவம் அது புரியாதே
| அவம்: வீண்; |
திருமகள் மருவிய திரள் புய அறு முக தெரிசனை பெற அருள் புரிவாயே
| திருமகள்: திருவின் மகள்—இலக்குமியின் மகளான வள்ளி; தெரிசனை: தெரிசனம்; |
பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள் பயறொடு சில வகை பணியாரம்
| பரிவுடன்: அன்புடன்; பணியாரம்: பலகாரம்; |
பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி எழுதிய கணபதி இளையோனே
| பழமொழி: பழையை மொழியான பாரதத்தை மேருவில் எழுதிய; |
பெரு மலை உருவிட அடியவர் உருகிட பிணி கெட அருள் தரு குமரேசா
| பெருமலை: பெரிய கிரெளஞ்ச மலை; |
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே.
| பிடி: பெண் யானை; களிறு: ஆண் யானை; கலை: ஆண் மான் (கலைமான்); பிணை: பெண் மான்; திருமலை: ஸ்ரீசைலம். |

ஒருபதும் இருபதும் அறுபதும் உடன்அறும் ... பத்தும் இருபதும் அறுபதும் ஆறும் (10+20+60+6) 96 வகையான தத்துவங்களை,

உணர்வுற ... உணர்ந்து,

இருபதம் உளநாடி உருகிட ... உள்ளம் உன்னுடைய இரண்டு திருவடிகளையும் நாடி, அதனால் உருக்கம் அடைந்திட,

முழுமதி தழலென ஒளிதிகழ் ... பௌர்ணமி நிலவின் சுடர்விடும் ஒளியைப் போல ஒளிவீசுவதான,

வெளியொடு ஒளிபெற விரவாதே ... பரவெளியின் ஒளியோடு ஒளியாக நான் ஒன்றுகலக்க முயலாமல்,

தெருவினில் மரமென ... வீதியிலே மரம் போல நின்று

எவரொடும் உரைசெய்து திரிதொழில் அவமது புரியாதே ... எல்லோருடனும் வீண்பேச்சுப் பேசிக்கொண்டு திரிகின்ற குற்றத்தை நான் செய்து அலையாமல் இருப்பதற்காக,

திருமகள் மருவிய ... திருவின் மகளான வள்ளியம்மை தழுவிய

திரள்புய அறுமுக ... திண்ட தோளை உடையவனே! ஆறுமுகனே!

தெரிசனை பெறஅருள் புரிவாயே ... உன்னுடைய தரிசனம் எனக்குக் கிட்டும்படியாக அருள்புரிய வேண்டும்.

பரிவுட னழகிய பழமொடு ... மிக்க அன்புடன் பழங்களோடு,

கடலைகள் பயறொடு சிலவகை பணியாரம் ... வகைவகையான கடலைகளையும்; பயறையும்; சிலவகையான பலகாரங்களையும்,

பருகிடு பெருவயி றுடையவர் ... அருந்துகின்ற பெரிய வயிற்றை உடையவரும்,

பழமொழி எழுதிய கணபதி யிளையோனே ... பழமையான மொழியாகிய மஹாபாரதத்தை மேருமலையில் எழுதியவருமான கணபதிக்குத் தம்பியே!

பெருமலை யுருவிட... பெரிய கிரெளஞ்ச மலையை ஊடுருவித் தூளடிக்கும்படியும்

அடியவர் உருகிட பிணிகெட அருள்தரு குமரேசா ... உன் அடியவர் உள்ளம் உருகும்படியும், அவருடைய பிறவியாகிய நோயையும், பிறப்பிலே வந்து சேர்ந்துள்ள நோய்களையும் நீக்கும்படிய அருள்புரியும் குமரேசனே!

பிடியொடு களிறுகள் நடையிட ... பெண் யானைகளும் ஆண் யானைகளும் நடை பழகுகின்ற;

கலைதிரள் பிணையமர் ... ஆண்மான் கூட்டமும் பெண்மான் கூட்டமும் ஒன்றாகச் சேர்ந்து அமர்வதான

திருமலை பெருமாளே. ... திருமலை எனப்படும் ஸ்ரீசைலத்தில் வீற்றுள்ள பெருமாளே!

சுருக்க உரை

அன்புடனே பழங்களையும், கடலை வகைகளையும் பயறையும் சில பலகாரங்களையும் அருந்தும் பெருவயிறுடையவரும்; பழைமையான மொழியாகிய பாரதத்தை மேருமலையில் எழுதியவருமான கணபதியின் இளையவனே! பெரிய கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படி வேல்வீசி அழித்தவனே! உன்னை நினைத்து நெகிழ்ந்து நெக்குருகும் அடியார்களுடைய பிறவியாகிய பிணியையும், பிறப்பினாலே ஏற்பட்டுள்ள நோய்களையும் ஒன்றாகத் தீரும்படி அருள்புரியும் குமரேசனே! பெண் யானைகளும் ஆண் யானைகளும் நடை பழகுகின்ற; ஆண் மான்களும் பெண்மான்களும் அமர்ந்திருக்கின்ற திருமலை எனப்படும் ஸ்ரீசைலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

தொண்ணூற்றாறு தத்துவங்களை உள்ளபடி உணர்ந்து, உன்னுடைய இரண்டு திருவடிகளையும் உள்ளத்தால் நாடி, மனம் உருகி, முழுநிலவின் ஒளியைப் போல ஒளிகொண்டதான பரவெளியின் ஒளியோடு ஒன்றாகக் கலக்க முயலாமல், தெருவிலே மரம்போல நின்றபடியும், எல்லோருடனும் வீண்பேச்சுப் பேசித் திரிந்தபடியும் பயனற்ற வகையில் நான் அலையாதபடி,

திருவின் மகளான வள்ளி தழுவப்பெற்ற திரண்ட புயங்களை உடையவனே! உன்னுடைய தரிசனத்தை அடியேனுக்குத் தந்தருள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை