பதச் சேதம் | சொற் பொருள் |
| அல் அசல அடைந்த வில் அடல் அநங்கன் அல்லி மலர் அம்பு தனை ஏவ | அல்: இரவு; அல்அசல்: இரவுக்கு நெருங்கிய மாலைப் போது; வில் அடல்: விற்போர்; அநங்கன்: மன்மதன் (அங்கமில்லாதவன் அநங்கன்); அல்லி மலரம்பு: தன்னுடைய தாமரைப்பூக் கணையை; |
| அள்ளி எரி சிந்த பிள்ளை மதி தென்றல் ஐயம் உது கிண்ட அணையூடே | அள்ளி எரி சிந்த: நெருப்பை அள்ளி இறைத்ததுபோல்; பிள்ளைமதி தென்றல்: பிறைச்சந்திரனும், தென்றலும்; ஐயம் உது கிண்ட: (‘உ’ சுட்டு) சந்தேகத்தைக் கிளற; அணை ஊடே: படுக்கையிலே; |
| சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று தொல்லை வினை என்று முனியாதே | அரவிந்த வல்லி: தாமரைக் கொடி போன்றவள்; தொல்லைவினை: பழைய வினை; முனியாதே: தன்னைத் தானே நொந்துகொள்ளாமல்; |
| துய்ய வரி வண்டு செய்ய அமுது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும் | துய்ய: தூய; வரிவண்டு: கோடுகளை உடைய வண்டு; செய்ய அமுது உண்டு துள்ளிய: சிவந்த தேனைப் பருகி, களிமயக்கில் துள்ளுவதான; கடம்பு: கடப்பமாலை; |
| கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே | கல் அசல: (ஒருபொருட் பன்மொழி) இரண்டுக்கும் மலை என்று பொருள்; (இந்த சரித்திரத்துக்கு விளக்கத்தில் பார்க்க); |
| கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே | கள்ளொழுகு கொன்றை: தேன் ததும்பும் கொன்றைப் பூவைச் சூடிய சிவபெருமான்; கல்லல்: ஐயம்; ஒன்றை: ஒப்பற்ற (பிரணவப் பொருளை); |
| வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில் வீரா | வல் அசுரர்: வலிய அரக்கர்கள்; நல்ல சுரர்: நல்லவர்களான தேவர்கள்; |
| வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே. | வள்ளி படர்கின்ற: வள்ளிக்கொடி படரும்; |

அல் அசல் அடைந்த வில் அடல் அநங்கன்… (இரவுக்கு அயலில்—அருகில்—இருப்பதான) மாலைப்போது ஆனதும், கரும்புவில்லைக் கொண்டு போர்தொடுக்கும் உருவற்றவனான மன்மதன்,

அல்லி மலர் அம்பு தனை ஏவ… தன் மலர்க்கணைகளிலே தாமரை மலரம்பைத் தொடுத்து (என் மகள்மீது) எய்ய

அள்ளி எரி சிந்த பிள்ளை மதி தென்றல்… (அந்தப் பூங்கணை போதாது என்று) பிறை நிலவும் தென்றலும் நெருப்பை வாரி இறைத்ததுபோல சுட்டெரிக்க,

ஐயம் உது கிண்ட அணையூடே… (இறைவனுடைய அருள் கிட்டுமோ கிட்டாதோ என்ற) சந்தேகம், படுக்கையில் கிடக்கும் என் மகளுடைய உள்ளத்தில் கிளர, கிளர்ந்து எழ;

சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று… (ஊராருடைய வம்பு மொழிகளில்) பேசப்படும் தாமரைக் கொடிபோன்ற என்மகள், தனியே கிடந்து,

தொல்லை வினை என்று முனியாதே… ‘இது அத்தனையும் என்னுடைய பழவினையினால் நேர்ந்தது என்று தன்னைத்தானே நொந்துகொள்ளாமல்;

(தொல்லைவினை தரு தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே—பாரதி. முதல் தொல்லைக்குப் பழைய என்றும் அடுத்த தொல்லைக்குத் துன்பம் என்றும் பொருள்.)

துய்ய வரி வண்டு செய்ய அமுது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும்… தூய வரிகளைக் கொண்ட வண்டு, சிவந்த தேனை உண்டு, அந்தக் கிறக்கத்தாலே துள்ளுவதாகிய (வண்டுகளுடன்கூடிய) உன் மார்பில் அணிந்திருக்கும் கடப்ப மாலையைத் தந்து அருளவேண்டும்.

கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே… மலைமகளான உமாதேவியின் முன்னிலை வரையில்* சென்று விரிந்த கரைகடந்த கல்வியை உடைய பெரும்புலவனே!

கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று… தேன் ததும்பும் கொன்றையைச் சூடிய வள்ளலான பரமேஸ்வரன் தொழுது நிற்க, அன்றொருநாள்,

கல்லல் அற ஒன்றை அருள்வோனே… ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை அவருக்கு ஐயம் கெடுமாறு உபதேசித்தவனே!

வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச… வலிய அசுரர்கள் அஞ்சம்படியும், நல்ல தேவர்கள் அசுர்களை விஞ்சும்படியும்,

வல்லமை தெரிந்த மயில் வீரா… உன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்திய மயில்வீரனே!

வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே… வள்ளிக் கொடிகள் படர்வதான வள்ளி மலைக்குப் போய், அங்கே இருப்பவளான வள்ளிப் பெருமாட்டியை மணம் முடித்த பெருமாளே!

(* கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரைகண்ட… ஒருகாலத்தில் தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து, தம்குழுவில் சிறந்த புலவருக்கு ‘வித்வதாம்பூலம்’ தர வேண்டும் என்று, அப்படிப்பட்ட சிறந்த புலவர் யார் என்று தேடினார்கள். கலைமகள் அம்சமாகிய ஒளவைக்குத் தர முனைந்த போது, ‘இதற்கான தகுதி ஐந்திரம் என்னும் இலக்கணம் இயற்றிய இந்திரனுக்கே உண்டு’ என்று அவர் மறுக்க; இந்திரனோ, ‘நான் செய்தது வெறும் வியாகரண நூல் மட்டுமே. ஆகவே இதற்கான முழுத் தகுதியையும் உடையவர் அகத்தியரே’ என்று சொல்ல; அகத்தியர், ‘அத்தகுதி சகலகலாவல்லியான சரஸ்வதிக்கே உண்டு’ என; சரஸ்வதியோ, ‘இதை ஏற்கத் தகுந்தவர் என் கணவரே’ என; பிரமனோ, ‘வாகீஸ்வரியும் ஞானேஸ்வரியுமான உமாமகேஸ்வரியே இதற்குத் தகுந்தவர்’ என்று மறுக்க; உமையம்மையோ, ‘என்னுள் பூத்தவனான ஞானஸ்கந்தன், ஞானபண்டிதன், சிவகுருநாதனல்லவோ இதற்குரியவன் என்று மறுக்க, இறுதியில் கந்தகிரிக்கு அனைவரும் சென்று கந்தனை வேண்ட, கந்தன் வித்வதாம்பூலத்தைத் தரித்து அருளினான். ஆகவே, ஒளவை தொடங்கி கல்அசல மங்கையான உமாதேவி எல்லை வரை அனைவரும் மறுத்து, அவர்களையெல்லாம் கடந்து பெரும் புலவனாக விளங்கும் கந்த கிருபாகரன் என்பது பொருள்).

சுருக்க உரை

மலைமகளான உமாதேவியாரையும் கடந்து பெரும்புலவன் என்ற கீர்த்தியைப் பெற்றவனே! தேன் ததும்பும் கொன்றையை அணிந்த சிவபெருமான் வணங்கிக் கேட்க, அவருக்கு ஐயம் கெடுமாறு ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை விளக்கியவனே! அசுரர்கள் அஞ்சுமாறும், தேவர்கள் மேம்பட்டு விளங்குமாறும் போர் ஆற்றலை வெளிப்படுத்திய வீரனே! வள்ளிக் கொடி படர்ந்திருக்கும் வள்ளி மலைக்குச் சென்று அங்கு வாழும் வள்ளியம்மையை மணமுடித்தவனே!

மாலைப் போதில் தோன்றிய மன்மதன் தன் மலரம்புகளில் உயர்ந்த அல்லிமலர் அம்பை எய்ய; பிறைநிலவும் தென்றலும் நெருப்பை வாரி இறைத்தது போலச் சுட்டெரிக்க; படுக்கையில் கிடக்கும் தாமரைக்கொடி போன்றவளான என் செல்வி, ‘தலைவனுடைய அருள் கிட்டுமோ கிட்டாதோ’ என்ற ஐயத்தால் மனம்வாட; அவள், ‘இது அத்தனையும் என் பழவினையாலே நேர்ந்தது’ என்று சொல்லி, தன்னைத்தானே நொந்துகொள்ளாமல், தேனை உண்டு அந்தக் களிமயக்கத்திலே துள்ளும் வரிவண்டுகள் நிறைந்ததான உன்னுடைய மார்பிலுள்ள கடப்பமாலையை அவளுக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை