இலங்கையின் கண்டி கதிர்காமக் கந்தன் ஆலயம் மிகத் தொன்மையான ஒன்று. சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று விக்கிபீடியா (http://tiny.cc/4gjj9x) குறிக்கிறது. கதிர்காமக் கந்தனைக் குறித்து அருணகிரியார் 13 பாடல்களைப் பாடியுள்ளார். முதல் பாதி முழுக்க குறிலாகவும், ஒவ்வொரு அடியில் 17-வது, 24-வது எழுத்துகள் மட்டும் நெடிலாகவும் அமைந்திருக்கும் சந்தம் கொண்ட பாடல். தாளகதிக்கான வகையுளியிலே (சொல் பிளவு) சொற்கள் பிரிந்திருக்கும் விதம் சற்று மயக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
எடுத்துக்காட்டாக, ‘மாவிற் புகுங்கந் தவழாது’ என்பதை ‘மாவில் (குதிரையில், மயிலில்) புகும் (ஏறும்) கந்த, வழாது’ என்று பிரிக்க வேண்டும். முதலடியில் உள்ள வகிர் அதிர்’ என்பதற்கு, வரிகளை உடைய புலி என்று பொருள். அடியேன் உன்னை இதமான மொழிகளால் பேசினாலும், ஆணவத்தோடு பேசினாலும் ஏழையான அடியேனிடம் கருணை காட்டுபவனே என்று சொல்லிப் பாடலை முடிக்கிறார். பிரிப்பதற்கு சிக்கலான பாடல். தணிகைமணி செங்கல்வராய பிள்ளையைப் போன்ற மகான்களுடைய உதவியால் பொருளை நிர்ணயித்துக்கொள்ள முடிகிறது. பொருளை நாளைக்கு ஓரளவு விரிவாகப் பார்ப்போம்.
கதிர்காமம் (நன்றி இணையம்)
தனதன தனதன தனதன தனதன
தானத் தனந்த - தனதான
கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
காமத் தரங்கம் - மலைவீரா
கனகத நககுலி புணரித குணகுக
காமத் தனஞ்சம் - புயனோட
வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் - தவழாது
வழிவழி தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன் - றிடுமோதான்
அடவியி ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென் - றயர்வோனே
அயிலவ சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண் - டருள்வோனே
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக் கிடங்கண் - டவர்வாழ்வே
இதமொழி பகரினு மதமொழி பகரினு
மேழைக் கிரங்கும் - பெருமாளே.
</p><p> </p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/249443880&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

