பதச் சேதம் | சொற் பொருள் |
அகல்வினை உள்சார் சட் சமயிகளொடு வெட்கா தட்கிடும் அறிவுஇலி வித்தார தனம் அவிகார
| அகல்வினை: பரந்த, பெரிய வினை (ஆகாமியம், பிராரப்தம், சஞ்சிதம், நல்வினை, தீவினை என்று ஐந்துவகை); உள்சார்: உட்பட்ட; சட்சமயி: ஆறு சமயங்களைச் சேர்ந்தோர்; வெட்கா: வெள்காது, அஞ்சாது; அட்கிடும்: வாதிக்கும்; வித்தார: விஸ்தார; அவிகார: விகாரமற்ற, அழகிய; |
அகில் கமழ் கத்தூரி தனி அணை மிசை கை காசுக்கு அளவு அருள்பவர் நட்பே கொட்பு உறும் ஒரு போதன்
| அணை: படுக்கை; கைக்காசுக்கு அளவு அருள்பவர்: கையிலுள்ள காசின் அளவுக்கு அன்பு தருபவர்; கொட்பு: சுற்றுவது; போதன்: அறிவுடையவன்; |
பகல் இரவில் போதில் பணி ப(ண்)ணி அற விட்டார் எட்டிய பரம மய சோதி சிவ மயமா(ய்) நின்
| பணி ப(ண்)ணி: சேவையைச் செய்து; அற விட்டார்: முற்றிலும் துறந்தார்; எட்டிய: அணுகிய; |
பழநி தனில் போய் உற்பவ வினை வி(ள்)ள கள் சேர் வெட்சி குரவு பயில் நல்தாள் பற்றுவது ஒரு நாளே
| உற்பவ வினை: பிறவியான துன்பம்; கள்சேர்: தேன் நிறைந்த; |
புகலி வனப்பு ஏற புகல் மதுரை மன் வெப்பு ஆற திகழ் பொடி கொ(ண்)டு புல் பாய் சுற்றிகள் கழு ஏற
| புகலி: சீகாழி; வனப்பு ஏற: அழகு கூட; புகல்: தஞ்சம்; மதுரை மன்: மதுரை மன்னன்; வெப்பு: சூலை, ஜுரம்; பொடி: திருநீறு; புல்பாய் சுற்றிகள்: புல்லாலான பாயை உடுத்த சமணர்கள்; |
பொருத சமர்த்தா குத்திர துரக முகக் கோதைக்கு இடை புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே
| குத்திர(ம்): வஞ்சகம்; துரகமுக: குதிரை முக; கோதை: பெண்; இடை: இடைந்த, தளர்ந்த, நலிந்த; |
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய்
| இகல்: பகைமை; நெட்டூர்: நெடிய ஊர்களான திரிபுரங்கள்; பொட்டெழ: பொடியாகத் தெறிக்க; இளநகை: புன்னகை; எழுபுவி: ஏழு உலகங்களையும்; துய்த்தார்: உண்டவரான திருமால்; மைத்துனர் மதலாய்: திருமாலின் மைத்துனரான சிவனுடைய பாலனே; |
வென்று இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை எழுதி வனத்தே எற்றிய பெருமாளே.
| இடர்வென்று அற: துன்பங்களை வென்று நீங்குப்படிச் செய்யும்; முப்பால்: திருக்குறள்; ஆரத்தினை: தேவாரத்தினை; வனத்தே: நீரிலே—வைகையாற்று வெள்ளத்திலே; எற்றிய: (எதிரேறும்படி) செலுத்திய; |

அகல்வினை உள்சார் சட் சமயிகளொடு வெட்கா தட்கிடும் அறிவு இலி ... மிகப் பெரியதான (ஆகாமியம், பிராரப்தம், சஞ்சிதம், நல்வினை, தீவினை என்ற ஐந்துவகைப்பட்ட) வினைகளுக்கு உட்பட்டவர்களான ஆறுசமயங்களைச் சேர்ந்தவர்களோடு அஞ்சாமல் வாதிடுபவனும், அறிவற்றவனும்(ஆன நான்);

வித்தாரத் தனம் அவிகார அகில் கமழ் கத்தூரித் தனி அணை மிசை கைக் காசுக்கு அளவு அருள்பவர்... பரந்த அழகிய மார்பை உடையவர்களோடு, அகில் கஸ்தூரி இவற்றின் மணம் கமழும் படுக்கையிலே, கொடுக்கின்ற காசுக்கு ஏற்ப அன்பு காட்டுபவர்களுடைய,

நட்பே கொட்பு உறும் ஒரு போதன் ... நட்பை விரும்பிச் சுற்றித் திரிகின்ற புத்தியை உடையவனான நான்,

பகல் இரவில் போதில் பணி ப(ண்)ணி அற விட்டார் எட்டிய ... பகலும் இரவும் எப்போதிலும் சேவையே செய்து, முற்றத் துறந்தவர்கள் அடைந்ததான,

பரம மயச் சோதிச் சிவ மயமா(ய்) நின் பழநி தனில் போய் ... பரம ஸ்வரூபமாகவும், ஜோதி ரூபமாகவும் சிவமயமாகவும் உள்ள உன்னுடைய பழனித் திருந்தலத்துக்கு வந்து,

உற்பவ வினை வி(ள்)ள கள் சேர் வெட்சி குரவு பயில் நல்தாள் பற்றுவது ஒரு நாளே ... பிறவித் துன்பமானது நீங்கும்படியாக; வெட்சி, குரா மலர்கள் நிறைந்துள்ளதான உன்னுடைய நல்ல பாதங்களை என்றேனும் பற்றுவேனா!

புகலி வனப்பு ஏறப் புகல் மதுரை மன் வெப்பு ஆறத் திகழ் பொடி கொ(ண்)டு புல் பாய் சுற்றிகள் கழு ஏற ... சீகாழித் தலத்துக்கு அழகு பெருகும்படி; தஞ்சமடைந்த மதுரைக் கூன்பாண்டியனுடைய வெப்புநோய் தணியவும்; கோரைப் புல்லாலான பாய்களை உடுத்திய சமணர்களைத் திருநீற்றால் வென்று அவர்களைக் கழுவேறுமாறு—

பொருத சமர்த்தா குத்திர துரக முகக் கோதைக்கு இடை புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே ... வாதிட்டு வென்ற சமர்த்தனே! வஞ்சகம் நிறைந்த குதிரை முகம்படைத்த கற்கிமுகி என்ற பெண்பேயிடம் அகப்பட்டுக்கொண்டு தளர்ந்த புலவர்களில் (ஒருவரான) நக்கீரருக்கு உதவிசெய்த வேளே!

இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் ... பகைகொண்ட பெரிய ஊர்களான திரிபுரங்கள் தூளாகும்படி, சிரித்தே புரமெரித்தவரும்; ஏழுலகங்களையும் உண்ட திருமாலின் மைத்துனருமான சிவபிரானின் பாலனே!

வென்று இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை ... துன்பங்களை வென்று, அவற்றை நீங்கச் செய்வதான திருக்குறளைக் காட்டிலும் மேலானதாகிய தேவாரத்தை,

எழுதி வனத்தே எற்றிய பெருமாளே. ... (திருஞான சம்பந்தராக அவதரித்து) வைகையாற்றில், வெள்ளத்தை எதிர்த்துப் போகுமாறு அந்து சுவடியைச் செலுத்திய பெருமாளே!

சுருக்க உரை

சீகாழித் தலத்துக்கு அழகும் பெருமையும் கூடும்படியும்; தஞ்சமடைந்த கூன்பாண்டியனுக்கு வெப்புநோய் நீங்கும்படியும்; கோரைப் பாய்களை உடுத்திருந்த சமணர்களை வாதிட்டுவென்று அவர்களைக் கழுவேறச் செய்து திருநீற்றின் பெருமையை விளங்கச் செய்த சமர்த்தனே! குதிரைமுகம் கொண்ட கற்கிமுகி என்ற பெண்பூதத்தின் சிறையிலே அடைபட்டிருந்த புலவரான நக்கீரருக்கு உதவிய வேளே! பகைமைகொண்ட பெரிய ஊர்களான திரிபுரங்களைச் சிரித்தே சுட்டெரித்துப் பொடியாக்கியவரும்; ஏழுலகங்களையும் உண்டருளியவரான திருமாலின் மைத்துனருமான சிவபெருமானுடைய பாலனே! இடர்களை வென்று, அவற்றை அறவே நீக்கக்கூடியதான திருக்குறளிலும் மேம்பட்டதான தேவாரத்தை எழுதி, வைகையாற்று வெள்ளத்தில் (தேவாரமெழுதிய) சுவடியை எதிரேறச் செய்த பெருமாளே!

பரந்து விரிந்ததான வினைகளுக்கு உட்பட்ட ஆறுசமயங்களைச் சேர்ந்தவர்களோடும் அஞ்சாமல் வாதிடும் அறிவிலியும்; அகில், கஸ்தூரி மணம் கமழும் படுக்கையில், கையிலுள்ள காசுக்குத்தக அன்பு காட்டுபவர்களின் நட்பை நாடிச் சுற்றித் திரியும் புத்தியைப் படைத்தவனுமான நான்,

முற்றிலும் துறந்தவர்கள், பகலும் இரவும் எப்போதும் சேவையைச் செய்தவர்கள் அடைந்ததும்; பரமஸ்வரூபமும் ஜோதியும், சிவஸ்வரூபமும் உடையதான பழனித் தலத்துக்கு வந்து பிறவியாகிய துன்பம் நீங்கும்படி; வெட்சி, குரா போன்ற மலர்கள் நிறைந்ததான உன்னிரு பாதங்களைப் பற்றிக்கொள்ளும் பேறு எனக்கு என்றேனும் கிட்டுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை