பதச் சேதம் | சொற் பொருள் |
எருவாய் கருவாய் தனிலே உருவாய் இதுவே பயிராய் விளைவாகி
| எருவாய்: உரமாகி; இதுவே பயிராய்: (கருவிலுள்ள) உருவமே பயிர்போல; விளைவாகி: விளைந்து; |
இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல
| இவர்: இருப்பவர்; அவர்: இறந்தவர்; தொடர்பாய்: தொடர்ச்சியாக; |
ஒரு தாய் இரு தாய் பல கொடிய தாயுடனே அவமாய் அழியாதே
| அவம்: வீண்; |
ஓரு கால் முருகா பரமா குமரா உயிர் கா என ஓத அருள்வாய்

முருகா என ஓர் தரம் ஓதும் அடியார் முடி மேல் இணை தாள் அருள்வோனே

முநிவோர் அமரோர் முறையோ எனவே முது சூர் உரம் மேல் விடும் வேலா
| முதுசூர்: தொன்மையான சூரபத்மன்; உரம்: மார்பு; |
திருமால் பிரமா அறியாதவர் சீர் சிறுவா திருமால் மருகோனே
| சீர்: மேன்மை; |
செழு மா மதில் சேர் அழகார் பொழில் சூழ் திருவீழியில் வாழ் பெருமாளே.
| செழுமா மதில்: செழித்த அழகிய மதில்; பொழில்: சோலை; திருவீழி: திருவீழிமிழலை; |

எருவாய் கருவாய் தனிலே யுருவாய்... விளைச்சலுக்கு வேண்டிய உரமாகி, கர்ப்பப் பையிலே கருவாகி, அந்தக் கருவுக்கு உருவம் ஏற்பட்டு;

இதுவே பயிராய் விளைவாகி ... அந்த உருவமே பயிரைப் போல விளையும்; (அதன் பிறகு),

இவர்போ யவராய்... ‘இதோ வாழ்கிறாரே இவர்’ என்பது போய் ‘அப்போது வாழ்ந்தாரே அவர்’ என்று மாறியும்;

அவர்போ யிவராய்... அப்படி ‘அவராக’ மாறியவர் பிறப்பெடுத்து, மீண்டும் ‘இவர்’ என்று குறிப்பிடப்பட்டும்;

துவே தொடர்பாய் வெறிபோல... இந்த நாடகமே ஒரு சங்கிலித் தொடராக வெறிபிடித்ததைப்போலத் (தொடர);

ஒருதா யிருதாய் பலகோ டியதாய் ... முதலிலே பிறவி எடுத்தபோது ஒருதாய், அடுத்த பிறவியிலே இரண்டாவது தாயென்று இப்படிப் பலகோடித் தாயர்களாய்,

உடனே அவமா யழியாதே ... உடனுக்குடனே அடைந்து வீணாக அடியேன் அழியாதவண்ணம்,

ஒருகால் முருகா பரமா குமரா ... ஒருமுறையேனும், ‘முருகனே, பரமனே, குமரனே’ என்றெல்லாம் அழைத்தும்;

உயிர்கா வெனவோத அருள்தாராய் ... எனதுயிரைக் காத்தருள்வாய், என்று இறைஞ்சும்படியாக உன் திருவருளைத் தந்தருள்வாய். (ஏனெனில் நீ),

முருகா வென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணைதாள் அருள்வோனே... ‘முருகா’ என்று ஒரே ஒருமுறை அழைக்கும் அடியார்களுடைய தலையின் மேலே உன்னிரு பாதங்களையும் பதித்து அருளுபவனாயிற்றே.

முநிவோர் அமரோர் முறையோ வெனவே ... முனிவர்களும் தேவர்களும் ‘இது முறையோ, இது தகுமோ’ என்று உன்னிடம் முறையிடுகையில்,

முதுசூ ருரமேல் விடும்வேலா ... தொன்மையான சூரபத்மனுடைய மார்பில் உன்னுடைய வேலைச் செலுத்தியவனே!

திருமால் பிரமா அறியா தவர் சீர்ச் சிறுவா... திருமாலாலும் பிரமனாலும் (அடியையும் முடியையும்) அறியமுடியாத பெருமையை உடைய சிவபெருமானது மைந்தனே!

திருமால் மருகோனே… திருமாலின் மருமகனே!

செழுமா மதில்சேர் அழகார் பொழில்சூழ்... செழிப்பான அழகிய மதில்கள் சேர்ந்ததும்; அழகிய சோலைகள் சூழ்ந்ததுமான

திருவீ ழியில்வாழ் பெருமாளே. ... திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

முனிவர்களும் தேவர்களும் (சூரன் விளைவித்த துன்பத்தைத் தாங்கமாட்டாமல்) ‘முறையோ’ என்று உன்னிடம் முறையிட்டதும், தொன்மையான அந்தச் சூரபதுமனுடைய மார்பைப் பிளக்குமாறு வேலை எறிந்தவனே! செழிப்பான அழகிய மதிலும் சோலைகளும் சூழ்ந்திருக்கும் திருவீழிமிழலையில் வீற்றிருப்பவனே!

(இந்த உயிரே ஒரு பயிராய்) உடலானது தாயின் கர்ப்பத்திலே உரமிப்பட்டு, கரு என்னும் நிலையை அடைந்து அந்நிலையிலிருந்து கை-கால்களுடன் உருவம் பெற்று பயிர் முளைப்பது போல முளைத்து வளர்ந்து, காலப்போக்கில் ‘இதோ இங்கே இருக்கும் இவர்’ என்று சொல்லப்பட்டு, பிறகு, ‘அன்றிருந்தாரே அவர்’ என்று குறிப்பிடப்பட்டு; அதன் பிறகு அவர் பிறப்பெடுத்து மீண்டும் ‘இவர்’ என்று குறிப்பிடப்படுவது ஒரு வெறிபிடித்த சுழலைப் போலத் தொடர்கிறது. அடியேனும் ஒவ்வொரு பிறப்பிலும் ஒரு தாயாய், ஒன்று இரண்டு பலகோடி என பற்பல தாயர்களை அடைந்தாயிற்று. இந்நிலை மேலும் தொடர்ந்து அடியேன் அழிவெய்தாமல், ஒருமுறையேனும் ‘முருகா! பரமா! குமரா!’ என்று உன்னைக் கூவியழைத்து உன் நாமத்தை ஓதும் அருளைத் தந்தருளவேண்டும். (ஏனெனில் நீயோ) ஒரே ஒருமுறை ‘முருகா’ என்று அழைக்கின்ற அடியார்களுடைய சிரங்களில் உன்னுடைய இரண்டு திருப்பாதங்களையும் வைத்துத் திருவடி தீட்சையளிப்பவனாயிற்றே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை