/

பகுதி - 234

இன்றைய பாடல் காசித் தலத்துக்குரியது.  ‘வேழமுண்ட விளாகனியது போல’ என்றொரு உவமை இதில் சொல்லப்படுகிறது. 

Updated On :4 மே 2016, 10:02 am

இன்றைய பாடல் காசித் தலத்துக்குரியது.  ‘வேழமுண்ட விளாகனியது போல’ என்றொரு உவமை இதில் சொல்லப்படுகிறது.

சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள், மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்
உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்து, என்னை
நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே.

என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடும் அதே ‘உலங்கு உண்ட விளங்கனி’தான் இது.  உலங்கு என்றால் கொசு; வேழம் என்றால் யானையாயிற்றே என்று தோன்றலாம்.  விளக்கங்களை நாளைக்குப் பார்ப்போம்.  இப்போது பாடல்:

தான தந்த தனாதன    தனதான

வேழ முண்ட விளாகனி            யதுபோல
   மேனி கொண்டு வியாபக        மயலூறி
நாளு மிண்டர் கள்போல்மிக       அயர்வாகி
   நானு நைந்து விடாதருள்       புரிவாயே
மாள அன்று மணீசர்கள்           கழுவேற
   வாதில் வென்ற சிகாமணி      மயில்வீரா
காள கண்ட னுமாபதி              தருபாலா
   காசி கங்கை யில்மேவிய        பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/262431529&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.