திருவடியைப் பெற வேண்டும் இந்தப் பாடல் திருத்தணித் தலத்துக்கானது. ‘என்னை உன்னுடைய திருத்தாளில் சேர்த்துக்கொள்ள நீயே மறுப்பாய் என்றால், உலகத்தோர் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள் ஐயனே! பாலுக்காக அழும் குழந்தையை யாராவது கைவிட்டு விடுவார்களா? எனக்குத் தந்தையும் தாயுமான நீ என்னைக் கைவிட்டுவிடுவாயா? இந்த உண்மை என் சிந்தையில் தோன்றக்கூடாதா’ என்றெல்லாம் உருக்கமாகக் கேட்கும் பாடல்.
ஒற்றொழித்து அடிக்கு 34 எழுத்துகள்; ஒவ்வொரடியிலும் மடக்கிலும் முதலெழுத்தும் ஆறாம் எழுத்தும் நெடில்; ஒற்று சேர்த்து ஒவ்வோரடியிலும் (மடக்கிலும்) நான்காம் எழுத்தும் பத்தாம் எழுத்தும் வல்லொற்று; தொங்கல் சீரில் இரண்டாமெழுத்து மெல்லொற்று என்று அமைந்திருக்கும் பாடல் இது.
தான தத்தன தான தத்தன
தான தத்னன தான தத்தன
தான தத்தன தான தத்தன தந்ததான
ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்குநி - தந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோதந கைத்தவர் - கண்கள்காணப்
பாதம் வைத்திடை யாதெ ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யாத கப்பன்முன் - மைந்தனோடிப்
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது - சிந்தியாதோ
ஓத முற்றெழு பால்கொ தித்தது
போல எட்டிகை நீச முட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை - யெங்கள்கோவே
ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான்ம ழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிட வேந டித்தவர் - தந்தவாழ்வே
மாதி னைப்புன மீதி ருக்குமை
வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
மார்ப ணைத்தம யூர அற்புத - கந்தவேளே
மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
வாழ் திருத்தணி மாம லைப்பதி - தம்பிரானே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

