திருவண்ணாமலைத் தலத்துக்கான இன்றைய பாடல், நாயகி பாவத்தில் பாடப்பட்டது. இறைவனை மயில் மீதில் ஏறி எப்போதும் வரவேண்டும் என்று கோரும் பாடல்.
அமைப்பு முறையில் அடிக்கு ஒற்று நீக்கி 31 எழுத்துகள்; 1, 4, 7 ஆகிய சீர்களில் குற்றெழுத்துகள்; 2, 5, 8 ஆகிய சீர்களின் முதலெழுத்து நெடில்; 3, 6, 9 ஆகிய சீர்களின் இரண்டாமெழுத்து வல்லொற்று.
தனனதன தான தத்த தனனதன தான தத்த
தனனதன தான தத்த - தனதான
தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
தழலமளி மீதெ றிக்கு - நிலவாலே
தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த
தறுகண்மத வேள்தொ டுத்த - கணையாலே
வருணமட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்று
மருவுமென தாவி சற்று - மழியாதே
மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
மயிலின் மிசை யேறி நித்தம் - வரவேணும்
கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி
கலவிதொலை யாம றத்தி - மணவாளா
கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
கடியமல ராத ரித்த - கழல்வீரா
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
அருணை நகர் கோபு ரத்தி - லுறைவோனே
அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
அமரர்சிறை மீள விட்ட - பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

