மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 420

திருவடியை வணங்கும் பேற்றைக் கேட்கும் இப்பாடல் திருச்செந்தில் தலத்துக்கானது.

Updated On :25 நவம்பர் 2016, 7:31 am

திருவடியை வணங்கும் பேற்றைக் கேட்கும் இப்பாடல் திருச்செந்தில் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகள்; தொங்கல் சீரில் மட்டுமே நெடில்; மற்ற அனைத்து எழுத்துகளும் குறில்; 2, 3, 5, 6, 8, 9 ஆகிய சீர்களில் இரண்டாமெழுத்து மெல்லொற்று.  இப்பாடலில் வல்லொற்று இடம்பெறவில்லை.

தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த
      தனதனன தந்த தந்த     -      தனதான

அனைவரும ருண்ட ருண்டு கடிதெனவெ குண்டி யம்ப
         அமரஅடி பின்தொ டர்ந்து  -    பிணநாறும்
      அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுடனெ லும்ப லம்பு
         மவலவுட லஞ்சு மந்து   -    தடுமாறி
மனைதொறுமி தம்ப கர்ந்து வரவரவி ருந்த ருந்தி
         மனவழிதி ரிந்து மங்கு  -    வசைதீர
      மறைசதுர்வி தந்தெ ரிந்து வகைசிறுச தங்கை கொஞ்சு
         மலரடிவ ணங்க என்று    -    பெறுவேனோ
தினைமிசைசு கங்க டிந்த புனமயிலி ளங்கு ரும்பை
         திகழிருத னம்பு ணர்ந்த   -    திருமார்பா
      ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
         திகிரிவலம் வந்த செம்பொன் -  மயில்வீரா
இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த
         இறைவகுக கந்த என்று    -     மிளையோனே
      எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சு
         மிமையவரை யஞ்ச லென்ற -   பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.