திருஞான சம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல்பெற்ற தலமான பெரும்புலியூருக்கான பாடலிது. ‘திருவடிகளைத் தந்தருள வேண்டும்’ என்று கோருகிறது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகள்; 1, 3, 5 ஆகிய சீர்களின் மூன்றாம் எழுத்து மெல்லொற்று; 2, 4, 6 ஆகிய சீர்களின் முதலெழுத்து நெடில்; மூன்றாமெழுத்து வல்லொற்று என்று வல்லொற்றும் மெல்லொற்றும் கலந்த சந்தம்.
தனந்ததன தானத் தனந்ததன தானத்
தனந்ததன தானத் தனதான
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
சரங்களொளி வீசப் புயமீதே
தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்
சரங்கண்மறி காதிற் குழையாட
இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்
றிரம்பையழ கார்மைக் - குழலாரோ
டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்
றிரங்கியிரு தாளைத் - தருவாயே
சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்
சிறந்தமயில் மேலுற் - றிடுவோனே
சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்
சினந்தசுரர் வேரைக் - களைவோனே
பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்
ப்ரசண்டஅபி ராமிக் - கொருபாலா
பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்
பெரும்புலியுர் வாழ்பொற் - பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

