இப்பாடல் ராஜபுரம் என்ற தலத்துக்கானது. தற்காலத்தில் இது ராசிபுரம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கிடைத்தற்கரிய ஆற்றல்கள் வாய்க்கப்பெற்றிருந்தாலும் மக்கள் அவற்றையெல்லாம் அற்பமான செயல்களிலும் முயற்சிகளிலும் செலவிட்டு அழிகிறார்கள். அரிதிலும் அரிதான கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர் அதனை நரஸ்துதியில் வீணே செலவிட்டு பிறப்பையே வீணடித்துக் கொள்கிறார்கள் அல்லவா, அதுபோல. நரஸ்துதியில் விழுந்து அழியாமல் இருக்கும் பேற்றை இந்தப் பாடல் கோருகிறது.
அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகள்; 3, 11, 19 ஆகிய எழுத்துகள் (எட்டெழுத்து இடைவெளியில்) நெடில், மற்றவை குறில். ஒற்றைச் சேர்த்து 2, 10, 18 (எட்டெழுத்து இடைவெளியில்) ஆகிய எழுத்துகள் மெல்லொற்று; 8, 18, 28 (பத்தெழுத்து இடைவெளியில்) ஆகியவை வல்லொற்று.
தந்த தானன தத்தன தந்த தானன தத்தன
தந்த தானன தத்தன தனதான
சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை
தண்டு மாகரி பெற்றவன் - வெகுகோடிச்
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி
சண்ட மாருத மற்றுள - கவிராஜப்
பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர
பந்த போதமு ரைத்திடு - புலவோன்யான்
பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில
பஞ்ச பாதக ரைப்புகழ் - செயலாமோ
வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ
ருண்டு மூலமெ னக்கரு - டனிலேறி
விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி
தம்ப ராவஅ டுப்பவன் - மருகோனே
கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடு
கொங்கின் வீரக ணப்ரிய - குமராபொற்
கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி
கொங்கு ராஜபு ரத்துறை - பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

