பழனித் திருப்புகழான இன்றைய பாடல் உபதேசித்து அருளவேண்டும் என்று இறைவனைக் கோருகிறது.
அமைப்பு முறையில் அடிக்கு ஒற்று நீக்கி 22 எழுத்துகள்; தொங்கல் சீரைத் தவிர்த்து மற்ற அனைத்து சீர்களிலும் குறில் பயில்கிறது; ஒற்று சேர்த்தால் ஒவ்வொரு சீரிலும் நான்காவது எழுத்து வல்லின மெய். பாடலைப் பார்ப்போம்.
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் - தனதான
புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
பொருமிக் கலசத் - திணையாய
புளகக் களபக் கெருவத தனமெய்ப்
புணரத் தலையிட் - டமரேசெய்
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
கறிவி பதடிக் - கவமான
அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
றடிமைக் கொருசொற் - புகல்வாயே
குடமொத் தகடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக் - கிளையோனே
குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
குறுகித் தகரப் - பொரும்வேலா
படலைச் செறிநற் கதலிக் குலையிற்
பழமுற் றொழுகப் - புனல்சேர்நீள்
பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
பழநிக் குமரப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

