வட ஆற்காட்டில் பாலாற்றங்கரையிலுள்ள வேப்பூர் என்ற தலத்துக்கான பாடலிது. ‘உணர்வோடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி வடிவினை உனது அழகிய திருவார்ந்த வாக்கால் மொழிந்து அருள வேணும்’ என்று கேட்கிறது. அனுபூதி பெற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய வடிவத்தை உபதேசித்தருள வேண்டும்’ என்பது சுருக்கமான பொருள்.
ஒற்றொழித்து அடிக்கு 23 எழுத்துகளும்; ஒவ்வொரு அடியிலும் (ஒற்றொழித்து) முதலாறு எழுத்துகள் குறிலாகவும்; 7, 9 ஆகிய எழுத்துகள் நெடிலாகவும்; ஒற்றோடு 8, 15 ஆகிய எழுத்துகள் மெல்லொற்றாகவும் அமைந்த பாடல்.
தனதன தனதன தனதன தாந்த
தாத்தான தந்த - தனதான
குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
கூத்தாடு கின்ற- குடில்பேணிக்
குகையிட மருவிய கருவிழி மாந்தர்
கோட்டாலை யின்றி - யவிரோதம்
வரஇரு வினையற உணர்வொடு தூங்கு
வார்க்கே விளங்கு - மனுபூதி
வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த
வாக்கால்மொ ழிந்த - ருளவேணும்
திரள்வரை பகமிகு குருகுல வேந்து
தேர்ப்பாகன் மைந்தன் - மறையோடு
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
தீப்பாய இந்த்ர - புரிவாழ
விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு
வேற்கார கந்த - புவியேழும்
மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
வேப்பூர மர்ந்த - பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

