அருவருப்பான செயல்களை ஒழித்து வடிவுள்ளதாகிய பேரின்பப் பொருளை உபதேசித்தருளவேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் நான்கு குற்றெழுத்துக்ளைக் கொண்டவை; இரண்டு, நான்கு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளைக் கொண்டவை; ஆறாவது சீர் மட்டும்—மூன்றெழுத்துகளையே கொண்டிருந்தாலும்—மூன்றாவது எழுத்து நெடிலாகவும் அதைத் தொடர்ந்து ஒரு வல்லொற்றுமாக அமையப்பெற்றவை.
தனதன தனன தனதன தனன
தனதன தனனாத் தனதான
தறுகணன் மறலி முறுகிய கயிறு
தலைகொடு விசிறீக் கொடுபோகுஞ்
சளமது தவிர அளவிடு சுருதி
தலைகொடு பலசாத் திரமோதி
அறுவகை சமய முறைமுறை சருவி
யலைபடு தலைமூச் சினையாகும்
அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற் கருள்வாயே
நறுமல ரிறைவி யரிதிரு மருக
நகமுத வியபார்ப் பதிவாழ்வே
நதிமதி யிதழி பணியணி கடவுள்
நடமிடு புலியூர்க் குமரேசா
கறுவிய நிருதர் எறிதிரை பரவு
கடலிடை பொடியாப் பொருதோனே
கழலிணை பணியு மவருடன் முனிவு
கனவிலு மறியாப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

