இளைத்துத் துவண்டு போகின்ற இந்த உடலைப் போற்றுகின்ற பொய்யனான நான் உன்னுடைய தூய்மையான திருவடி ஆண்டுகொள்ளும் வழி எதுவென்று அறிகிலேன்; என்னை ஆண்டுகொண்டருள வேண்டும் என்று கோரும் இப்பாடல் அரக்கோணத்துக்கு 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வெள்ளிகரம் என்னும் தலத்துக்கானது
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒற்றொழித்து நான்கு குற்றெழுத்துகளாகவும்; கணக்கில் சேராத இரண்டாவது எழுத்து இடையின ஒற்றாகவும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்குகின்ற இரண்டெழுத்துகளும் பயின்று வருகின்றன.
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான தனதான
இல்லையென நாணி யுள்ளதின் மறாம
லெள்ளினள வேனும் பகிராரை
எவ்வமென நாடி யுய்வகையி லேனை
யெவ்வகையு நாமங் கவியாகச்
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
தொல்லைமுத லேதென் றுணரேனைத்
தொய்யுமுடல் பேணு பொய்யனை விடாது
துய்யகழ லாளுந் திறமேதோ
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
மையவரை பாகம் படமோது
மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
வள்ளிமலை வாழுங் கொடிகோவே
வெல்லுமயி லேறு வல்லகும ரேச
வெள்ளிலுட னீபம் புனைவோனே
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
வெள்ளிநகர் மேவும் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

