மாசுகள் அறக் கோரும் இப்பாடல் திலதைப்பதிக்கு உரியது. திலதைப்பதி என்பது தற்காலத்தில் கோயிற்பத்து என்ற பெயரால் அறியப்படுகிறது. தஞ்சையில் பேரளம் என்ற ஊருக்கு அருகே இருக்கிறது. திருஞான சம்பந்த சுவாமிகளின் பாடல்பெற்ற தலம். இப்பாடலின் முதலடியை ‘இட்டு உ(ண்)ணல் ஏய்தரும் காலம் இறையத்தனையோ அதுதானும் இலை’ என்று கொண்டுகூட்டிக்கொள்ள வேண்டும்.
தொங்கல் சீரை ஒழித்து அடிக்கு இரண்டே சீர்களை உடைய சிறிய பாடல். அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல். முதற் சீரில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டாம் சீரில் இரண்டு குறில், ஒரு நெடில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனனத் தனனா தனதான
தனனத் தனனா தனதான
இறையத் தனையோ அதுதானும்
இலையிட் டுணலேய் தருகாலம்
அறையிற் பெரிதா மலமாயை
அலையப் படுமா றினியாமோ
மறையத் தனைமா சிறைசாலை
வழியுய்த் துயர்வா னுறுதேவர்
சிறையைத் தவிரா விடும்வேலா
திலதைப் பதிவாழ் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


